குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே மது விற்றதாக இருவர் கைது செய்யப்பட்டனர். குமாரபாளையம் எஸ்.ஐ., மலர்விழி, போலீசார் பிரபாகரன், திருமலைவாசன் ஆகியோர் வட்டமலை பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள கோழிக்கடை ஒன்றில் மது பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் கிடைத்து. நேரில் சென்று பார்த்த போது மது விற்கப்படுவது தெரியவந்தது. அங்கு பணியாற்றிய இப்ராகிம், 29, என்பவரை போலீசார் கைது செய்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதே போல் அதே பகுதியில் மற்றொரு கோழிக்கடையில் மது பாட்டில்கள் விற்பது தெரியவந்து, அந்த கடை உரிமையாளர் பெருமாள், 50, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து, 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.