சகோதரியின் வீடு புகுந்து தகராறு; தம்பி உள்பட இருவர் கைது | நாமக்கல் செய்திகள் | Dinamalar
சகோதரியின் வீடு புகுந்து தகராறு; தம்பி உள்பட இருவர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
16:25

மோகனூர்: மோகனூர் அடுத்த மாமரத்துபட்டியை சேர்ந்தவர் பாப்பாயி, 68. இவரது தம்பி கந்தசாமி, 66. இவர்களின் தந்தைக்கு பாத்தியப்பட்ட நிலம் உள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் உள்ள வீட்டில் பாப்பாயி வசித்து வந்துள்ளார், வீட்டை காலி செய்ய சொல்லி கந்தசாமி குடும்பத்தினர் பலமுறை வற்புறுத்தியுள்ளனர். இந்நிலையில், கந்தசாமி, அவரது மனைவி லட்சுமி, மகள் செல்வராணி, மருமகன் சுதாகர் மற்றும் உறவினர்கள், பாப்பாயி இருந்த வீட்டிற்குள் ஆயுதங்களுடன் புகுந்து, தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதாகவும், வீட்டையும், 'டிவி' பிரிட்ஜ், மிக்ஸி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுதாகர், கந்தசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். லட்சுமி, செல்வராணி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X