கரூர்: கரூரில், பரவலாக மழை பெய்த நிலையில், அதிகபட்சமாக கடவூரில், 40 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. தமிழகத்தில், பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று, அவ்வப்போது மழை பெய்தது. வெயிலும் அடித்ததால், சாலைகளில் தேங்கிய நீர் வடிய தொடங்கிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு விபரம் (மில்லி மீட்டர்) வருமாறு: கரூர், 1.2, அரவக்குறிச்சி, 6.2, க.பரமத்தி, 9.4, கிருஷ்ணராயபுரம், 1, மாயனூர், 1, பஞ்சப்பட்டி, 1.6, பாலவிடுதி, 37.2, கடவூர், 40, மைலம்பட்டி, 7, மி.மீ., மழை பதிவாகி இருந்தது.