கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து கடை வீதியில், பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்பாடு குறித்து ஆய்வு பணி நடந்தது. கிருஷ்ணராயபுரம் கடைவீதியில் மளிகை கடைகள், டீக்கடைகள், ஓட்டல்கள் உள்ளன. இங்கு பொருட்களை வாங்க வருவோர், கேரி பேக்குகளில் கொண்டு செல்கின்றனர். இப்பகுதியில் கேரிபேக் பயன்பாடு மீண்டும் அதிகரித்துள்ளது. இதை தடுக்கும் வகையில் கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் யுவராணி தலைமையில், பணியாளர்கள் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்தப்படுகிறதா என, ஆய்வு செய்தனர். பிளாஸ்டிக் கேரி பேக்குகள் வைத்திருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் வழங்கக்கூடாது. அதற்கு பதிலாக துணி பைகளை பயன்படுத்த வேண்டும் என, கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது.