தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் | கரூர் செய்திகள் | Dinamalar
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
16:27

குளித்தலை: குளித்தலை, நெடுஞ்சாலை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன், நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கருணாகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் விஜயகுமார் கோரிக்கை குறித்து பேசினார். இதில், அரசாணைப்படி கட்டணமில்லா சிகிச்சை முறையில், 100 சதவீதம் தொகை வழங்க வேண்டும். மருத்துவமனைகள் முன்பணம் கேட்பதை தடைசெய்து, அரசாணை வெளியிடவேண்டும். கண்புரை அறுவை சிகிச்சை, கர்ப்பப்பை அகற்றும் சிகிச்சை, கொரோனா சிகிச்சைக்கு பேக்கேஜ் முறையை ரத்து செய்யவேண்டும். முதலமைச்சர் காப்பீடு திட்டத்தில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகள் மற்றும் பரிசோதனை கட்டணங்கள், அரசு ஊழியர் காப்பீடு திட்டத்தில இணைக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்வித்துறை, வருவாய், மருத்துவம், கால்நடை, நெடுஞ்சாலைதுறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X