க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் தேவை | கரூர் செய்திகள் | Dinamalar
க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் தேவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
16:27

க.பரமத்தி: க.பரமத்தியில், தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி, கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதை சுற்றி முன்னூர், ஆரியூர், காருடையாம்பாளையம், குப்பம், அத்திப்பாளையம், பவுத்திரம், தென்னிலை கிழக்கு, நடந்தை உள்ளிட்ட எட்டுக்கும் மேற்பட்ட பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு முக்கிய இடமாக விளங்கி வருகிறது. இப்பகுதியில் யூனியன் அலுவலகம், மின்வாரியம், போலீஸ் ஸ்டேஷன், இன்ஜினியரிங் கல்லூரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், எக்ஸ்போர்ட் நிறுவனங்கள், வாரச்சந்தை, வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளன. இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால், அரவக்குறிச்சி அல்லது கரூருக்கு தான் தகவல் தெரிவிக்க வேண்டியுள்ளது. கரூர், அரவக்குறிச்சியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வருவதற்குள், பெரும் பகுதி எரிந்து விடுகிறது. எனவே, க.பரமத்தியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இதை நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X