அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மகிழ்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
22:26

உடுமலை: உடுமலை பகுதிகளில், கன மழை பெய்து வருவதால், அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. அதிகப்பட்சமாக, அமராவதியில், 104 மி.மீ., பதிவாகியுள்ளது.


உடுமலை பகுதிகளில், கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த, 20ம் தேதி, சின்னபாப்பனுாத்து, கொடிங்கியம், பூலாங்கிணர், அந்தியூர் பகுதிகளில், மிக கன மழை பெய்து, வறண்டு காணப்பட்ட, ஓடைகள், தடுப்பணை மற்றும் குளம், குட்டைகள் நிரம்பின.நேற்றுமுன்தினம், மதியத்திற்கு மேல், உடுமலை, அமராவதி மற்றும் திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்தது. இதனால் அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


அமராவதி அணை உடுமலை அருகேயுள்ள அமராவதி அணை வாயிலாக, திருப்பூர், கரூர் மாவட்டங்களிலுள்ள, 54 ஆயிரத்து, 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.தென்மேற்கு பருவ மழையால், ஜூலை 23ம் தேதி, மாலை அணை நிரம்பியது. தொடர்ந்து,மூன்று மாதமாக அணை நிரம்பிய நிலையில் காணப்பட்டது; அணைக்கு வரும் உபரி நீர் அனைத்தும், ஆறு மற்றும் பிரதான கால்வாயில் திறக்கப்பட்டது.


வழக்கமாக ஜூன் மாதம் பாசனத்திற்கு நீர் திறக்கப்படும் நிலையில், நடப்பாண்டு, அணை கட்டப்பட்டு, 64 ஆண்டுகளில், முதல் முறையாக, மே மாதம், 16ம் தேதி, ராஜவாய்க்கால் பாசனத்திற்கும், செப்., 21ம் தேதி, பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திலுள்ள, இரு மாவட்ட பாசன நிலங்களுக்கு சம்பா சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டது. அணையிலிருந்து, ஆற்று மதகு மற்றும் பிரதான கால்வாயில் நீர் திறக்கப்பட்டதால், அணை நீர் மட்டம், 10 அடி வரை குறைந்தது.இந்நிலையில், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளான, மேற்கு தொடர்ச்சிமலையில் அமைந்துள்ள, தலையாறு, மூணாறு, மறையூர், கோவில்கடவு மற்றும் வால்பாறை மலைத்தொடரின் கிழக்கு பகுதி, கொடைக்கானல் மலையின் மேற்கு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது.


இதனால், அணைக்கு நீர் வரும், பாம்பாறு, தேனாறு, சின்னாறு மற்றும் வனப்பகுதி ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.நேற்று காலை நிலவரப்படி, அணை நீர் மட்டம், 80.65 அடியாகவும், நீர் இருப்பு, மொத்தமுள்ள, 4,047 மில்லியன் கன அடியில், 3,229.71 மில்லியன் கன அடியாகவும்இருந்தது.நீர் வரத்து வினாடிக்கு, 1,639 கன அடியாக உயர்ந்தது. அணையிலிருந்து, ஆற்றில், வினாடிக்கு, 575 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.திருமூர்த்தி அணை பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், திருமூர்த்திமலைப்பகுதிகளில் பெய்த கன மழை காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பஞ்சலிங்கம் அருவியில் நீர் ஆர்ப்பரித்துக்கொட்டியது.


மலையடிவாரத்தில் பாலாற்றின் கரையிலுள்ள, சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை, வெள்ளம் சூழ்ந்தது.பல அடி உயரத்திற்கு நீர் சென்ற நிலையில், நேற்று காலை நீர் வரத்து குறைந்தது. இதனால், திருமூர்த்தி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி, மொத்தமுள்ள, 60 அடியில், 37.13 அடி நீர் மட்டமும், நீர் இருப்பு, 1,060.32 மில்லியன் கன அடியாகவும் இருந்தது.அணைக்கு பாலாற்றின் வழியாக, வினாடிக்கு, 224 கன அடி நீர் வரத்தும், காண்டூர் வழியாக, 876 கன அடி என, 1000 கன அடி நீர் வரத்து காணப்பட்டது.அணையிலிருந்து, பிரதான கால்வாயில், 408 கன அடி நீர், குடிநீர், 21 கன அடி என, 431 கன அடி நீர் திறக்கப்பட்டது. கடந்த, இரு நாட்களில், அணை நீர் மட்டம், 3 அடி உயர்ந்துள்ளது.


அணையிலிருந்து 4ம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பாசன பகுதிகளில் மழை பெய்துள்ளதால், நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.மகிழ்ச்சியான மழைஅமராவதி அணைப்பகுதியில், அதிக பட்ச மழையாக, 104 மி.மீ., பெய்துள்ளது. திருமூர்த்தி அணைப்பகுதியில், 75 மி.மீ., மழையும், நல்லாறு அணைப்பகுதியில், 72 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது. உடுமலையில், 25.2 மி.மீ., மழையும், பெதப்பம்பட்டியில், 17 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X