கடத்துாரில் மரக்கன்றுகள் நடவு ஊராட்சி நிர்வாகம் ஆர்வம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
22:32

உடுமலை: வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், ஊராட்சியை பசுமையாக்கும் வகையில் மரக்கன்று நடவு செய்யப்பட்டது.


'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், மாவட்டத்தில் நடப்பட்ட மரக்கன்றுகள், தொடர் பராமரிப்பு காரணமாக மரங்களாக மாறியுள்ளன. 'வனத்துக்குள் திருப்பூர்---7' திட்டத்தில், இரண்டு லட்சம் என்ற இலக்குடன் துவங்கிய பணி, 60 சதவீதத்தை தாண்டி மரக்கன்று நடப்பட்டுள்ளது.

தற்போது பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், வரும் வாரங்களில், இலக்கை மிஞ்சும் வகையில், மரக்கன்றுகள் நடப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.


இத்திட்டத்தில், மடத்துக்குளம் தாலுகா, கடத்துார் ஊராட்சியில், குட்டை கரைகள் மற்றும் ஊராட்சிக்கு சொந்தமான நிலங்களில், வேம்பு, நாவல், இலுப்பை, பூவரசு, புளி, கடுக்காய், இலவம் பஞ்சு, நாவல், அரசு, வாகை என, 500 மரக்கன்றுகள் நடப்பட்டன.


ஊராட்சி தலைவர் கமலவேணி கலையரசு, துணைத்தலைவர் அப்துல் பாரூக், கவிதா, செந்தில்குமார், பிரேமா காளிமுத்து, கனி சாம்புகன், ஜெயராமன், அருள்மணி, செந்திலரசு, திருமாவளவன், மருதையப்பன், முருகன், ஊராட்சி செயலர் அறிவுத்தம்பி மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர். இத்திட்டத்தில், மரக்கன்று நடவு செய்து, பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்ட குழுவினர் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X