இடைவெளியின்றி பெய்யும் கனமழையால்... ததும்பும் அணைகள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
22:47

பொள்ளாச்சி: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்வதால், பி.ஏ.பி., அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால், இந்தாண்டு பாசனத்துக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது என்ற நிலை உருவாகியுள்ளது.


மேற்கு தொடர்ச்சிமலையில், பெய்யும் பருவமழையை சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கு பயன்படுத்தும் வகையில், மேல்நீராறு, கீழ்நீராறு, சோலையாறு, பரம்பிக்குளம், காடம்பாறை, மேல்ஆழியாறு, ஆழியாறு அணைகளும், உடுமலையில் திருமூர்த்தி அணையும் உள்ளன.

இந்தாண்டு, மலைப்பகுதியில் ஜூன் மாதம் துவக்கத்தில் இருந்து கனமழை பெய்கிறது. இதில், வால்பாறை அடுத்துள்ள, 160 உயரமுள்ள சோலையாறு அணை, ஜூலை 23ம் தேதி நிரம்பியது. அதன்பின், அணையில் இருந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு நீர் வெளியேற்றப்படுகிறது. இந்தாண்டு, இதுவரை சோலையாறு அணை ஐந்து முறை நிரம்பியுள்ளது.

இதேபோன்று, பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்துக்கு நீர் நிரம்பி, கடந்த, செப்., 6ம் தேதி நிரம்பி வழிந்தது. அதன்பின், அணைக்கு வரும் அதிகப்படியான நீர், உபரி நீராக ஆற்றில் திறந்து விடப்படுகிறது.பொள்ளாச்சி அடுத்துள்ள, ஆழியாறு அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு, புதிய ஆயக்கட்டு, கேரள மாநில பாசனம் மற்றும் மக்களுக்கு குடிநீருக்காக தண்ணீர் வழங்கப்படுகிறது.


பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதி விவசாயம், ஆழியாறு அணையை நம்பியே உள்ளது. மேலும், அணையில் இருந்து, 13 கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.மழையின் கருணையால் கடந்த, நான்கு ஆண்டுகளாக, ஆழியாறு அணை நிரம்பியுள்ளது. கடந்த ஆண்டுகளில் இல்லாதது போன்று, நடப்பாண்டு அதீத மழை பெய்வதால், ஆழியாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

கடந்த, ஆக., 31ம் தேதி முதல் முறையாக நிரம்பியது. அதன்பின் நேற்று வரை, அணையின் மொத்த கொள்ளளவான, 120 அடியில், 119 அடிக்கு குறையாமல் நீர்மட்டம் உள்ளது. அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து நீர் வரத்து உள்ளதுடன், காடம்பாறையில் மின் உற்பத்தி துவங்கப்பட்டு, மேல்ஆழியாறு அணையில் இருந்தும், ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.


இதனால், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அணை நிரம்பி, மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆக., 31 முதல் நேற்று வரை, தொடர்ந்து, 23 முறை அணை நிரம்பி, மதகுகள் வழியாக, உபரிநீர் வெளியேற்றப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாசன பரப்புக்கு, திருமூர்த்தி அணையில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. மொத்தம், 60 அடி உயரமுள்ள திருமூர்த்தி அணை நிரம்பும் நிலைக்கு வந்த போது, 4ம் மண்டலம் பாசனம் துவங்கி, ஆக., 6 முதல் நீர் வினியோகிக்கப்படுகிறது.


கடந்த ஒரு வாரமாக, மலைப்பகுதியிலும், சமவெளிப்பகுதிகளிலும் பெய்யும் கனமழையால், அனைத்து அணையில் இருந்தும் வெளியேறும் உபரி நீரால் குளம் மற்றும் தடுப்பணைகள் நிரப்பப்பட்டு, அனைத்து பாசனங்களுக்கும் தண்ணீர் வழங்கப்படுகிறது.தொடர் மழையால், நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்து அனைத்து தரப்பினருக்கும் நிம்மதியளிக்கிறது. இந்நிலையில், வரும், 26ம் தேதி முதல் வடகிழக்குப் பருவமழையும் துவங்கவுள்ளதால், விவசாயிகள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X