வண்டிக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வது கஷ்டம்: மக்கள் அவதி | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
வண்டிக்காரத் தெருவில் வாகனங்கள் செல்வது கஷ்டம்: மக்கள் அவதி
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
23:10

ராமநாதபுரம் : ராமநாதபுரம் வண்டிக்காரத்தெருவில் பத்திரப்பதிவு அலுவலகம், தாலுகா அலுவலகம் அருகே ரோட்டை ஆக்கிரமித்து இருசக்கரவாகனங்களை நிறுத்துவதால், பிற வாகனங்கள், பொது மக்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.



ராமநாதபுரம் தாலுகா அலுவலகத்திற்கு பட்டாமாறுதல், ஆதார் அட்டை, ரேஷன்கார்டு, வருமானச்சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக அன்றடாம் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். தற்போது பாதுகாப்பு கருதி தாலுகா அலுவலகத்திற்குள் மக்கள் வாகனங்களுடன் உள்ளே நுழைய அனுமதியில்லை.இதேப்போல பத்திர பதிவு அலுவலகத்திற்குள் வாகனம் நிறுத்த போதுமான வசதியில்லை.

இதன் காரணமாக தாலுகா அலுவலக நுழைவுவாயில் அருகே இருசக்கர வாகனங்களை நிறுத்துகின்றனர். பொது மக்கள் வந்து செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது.வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.----

 

Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X