நீக்கம்: உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிகள்...மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
23:36

புதுச்சேரி-புதுச்சேரியில் அறிவிக்கப்பட்ட உள்ளாட்சி தேர்தல் தேதிகள் காலாவதியாகிவிட்டதால், நன்னடத்தை விதிகள் பயனற்றதாகிவிட்டதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.



புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 5 நகராட்சி, 10 கொம்யூன் பஞ்சாயத்துகளில் உள்ள 1,149 உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தலை கடந்த செப்டம்பர் 22ம் தேதி மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதில், வார்டு மறு சீரமைப்பு மற்றும் இட ஒதுக்கீட்டில் குளறுபடி உள்ளதாக சுயேச்சை எம்.எல்.ஏ., உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள், குளறுபடிகளை சரி செய்து தேர்தலை நடத்த அறிவித்தனர்.அதனையேற்று மாநில தேர்தல் ஆணையம் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டை நீக்கி, கடந்த 8 ம் தேதி மீண்டும் நவ. 2; 7 மற்றும் 13 தேதிகளில் மூன்று கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.இதில், பிற்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர் இட ஒதுக்கீடு நீக்கப்பட்டதை கண்டித்து எதிர்கட்சி தலைவர் சிவா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.



வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுதொடர்பாக அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் பதில் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை அக். 21ம் தேதிக்கு ஒத்தி வைத்தும், அதுவரை தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து உத்தரவிட்டனர். இருப்பினும், தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதனைத் தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ.,க் கள் தேர்தல் ஆணையரை சந்தித்து, நடத்தை விதிகளை திரும்பப் பெற வலியுறுத்தினர். அதற்கு அவர், வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதால், நன்னடத்தை விதிகளை திரும்பப் பெற முடியாது எனக் கூறினர்.



இவ்வழக்கு நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இட ஒதுக்கீடு பிரச்னை தொடர்பாக பதில் அளிக்க அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையம் கால அவகாசம் கோரியது. அதனையேற்ற நீதிபதி, வழக்கை நவ., 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதனால், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதா? இல்லையா என்ற குழப்பம் நிலவியது.



இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, நேற்று மாலை செய்தி குறிப்பை வெளியிட்டது.அதில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பான மூன்று வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தேர்தல் தொடர்பான பணிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை வரும் 11ம் தேதிவரை நீட்டித்து உத்த ரவிட்டுள்ளது.இதனால், ஆணையம் அறிவித்த மூன்றாம் கட்ட தேர்தலுக்கான தேதி (22ம் தேதி) நேற்றுடன் முடிவுற்றுள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம், சட்ட வல்லு நர்களின் ஆலோசனையின்படி, புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியக் கூறுகள் தள்ளிப் போயுள்ளது.



இதனால், தற்போது நடைமுறையில் உள்ள தேர்தல் நன்னடத்தை விதிகள் தொடர்வது பயனற்றதாகிவிட்டதாக அறிவித்துள்ளது.மாநிலத்தில் கடந்த 31 நாட்களாக அமலில் இருந்த தேர்தல் நன்னடத்தை விதிகள் நேற்றுடன் நீங்கியதால், மக்கள் பிரதிநிதிகள் மற்றம் அரசியல் கட்சி பிரமுகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X