ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளுக்கு, திருப்பதி ஏழுமலையான் பட்டு சாற்றும் வைபவம் நடந்தது.புரட்டாசி
பிரம்மோற்ஸவம் ஐந்தாம் நாளில் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு சாற்றுவதற்காக, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, கிளி, பட்டு வஸ்திரம் கொண்டு செல்வது வழக்கம். இதற்கு எதிர்சீராக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருந்து பெருமாள் உகந்தனுப்பிய பட்டு ஆண்டாளுக்கு அனுப்பப்பட்டது.இதை ஆண்டாளுக்கு சாற்றும் வைபவம் நேற்று இரவு 7:10 மணிக்கு கோயில் வளாகத்தில் நடந்தது.
வெள்ளிக்குறடு மண்டபத்தில் ரெங்க மன்னாருடன் எழுந்தருளிய ஆண்டாளுக்கு பட்டு சாற்ற சிறப்பு பூஜைகள் நடந்தது. அனிருத் பட்டர் செய்தார். இதன் பின் சேவா காலம், தீர்த்த கோஷ்டி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.