மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாமனார் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
மருமகன் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த மாமனார்
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
23:49

கோவை;கோவை சுங்கம் காந்தி நகரை சேர்ந்தவர் அகஸ்டின் ஜெபராஜ், 35. இவருக்கும் புலியகுளம் பெரியார் நகரை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.இரு மாதங்களுக்கு முன், இளம்பெண் கணவரை பிரிந்து துாத்துக்குடிக்கு சென்றார்.


நேற்று முன்தினம் புலியகுளம் பெரியார் நகரில் உள்ள தனது மாமனார் தேவராஜ், 52 வீட்டுக்கு சென்று மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறினார்.இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த தேவராஜ், தனது மருமகன் மீது பெட்ரோலை ஊற்றி, தீப்பற்ற வைத்தார். இதில் அகஸ்டின் ஜெபராஜ் உடலில் தீப்பற்றி எரிந்தது. அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X