விஜயபாஸ்கர் கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
விஜயபாஸ்கர் கூட்டாளிகள் வீடு, அலுவலகங்களில் 'ரெய்டு'
Advertisement
 

பதிவு செய்த நாள்

22 அக்
2021
23:50

- நமது நிருபர் குழு -

சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் மற்றும் கூட்டாளிகளின் வீடு, அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாக, சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார்வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரு தினங்களுக்கு முன், விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்கள், தொழில் பங்குதாரர்கள், உதவியாளர் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்களில் சோதனை நடத்தி, 5 கிலோ தங்கம், 23 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.சென்னை நந்தனம், சேமியர்ஸ் சாலையில், அடுக்குமாடி குடியிருப்பில், விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் வீடு உள்ளது. அதேபோல, அவரது கூட்டாளி கோவையைச் சேர்ந்த சந்திரசேகர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் தனியார் நிறுவனம் நடத்துகிறார்.

சென்னை அண்ணா நகர், சாந்தி காலனியில், விஜயபாஸ்கரின் முன்னாள் உதவியாளர் முருகன் வசிக்கிறார். இவர்களது வீடு, அலுவலகங்கள் பூட்டிக் கிடந்ததால், போலீசார் சோதனை நடத்தவில்லை. அந்த இடங்களில் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அதேபோல, சேலம், வேலு நகரைச் சேர்ந்தவர் டாக்டர் செல்வராஜ், 52. அவர், விஜயபாஸ்கரின் கல்லுாரி நண்பர்; சீலநாயக்கன்பட்டியில் மருத்துவமனை நடத்தி வருகிறார்.இந்த மருத்துவமனை மற்றும் செல்வராஜ் வீட்டிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X