2022 பிப்., 15ல் கோவை 'மாஸ்டர் பிளான்!' நவ., 2வது வாரம் வரைவு சமர்ப்பிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
01:04

கோவை;கோவைக்கான வரைவு 'மாஸ்டர் பிளான்', நவ., இரண்டாவது வாரத்தில், தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும். 2022, பிப்., 15ல் அறிவிக்கப்பட உள்ளது.கோவை மாவட்டத்துக்கான மாஸ்டர் பிளான், 1994ல் வெளியிடப்பட்டது. திட்டச்சாலை உருவாக்குதல், வேளாண் நிலங்களை குடியிருப்புகளாக மாற்றுதல், நில உபயோக வகை மாற்றம் செய்வது தொடர்பாக, வரைபடத்தில், பலமுறை திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


27 ஆண்டுகளுக்கு பின், புதிய மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான வேலையை, நகர ஊரமைப்புத்துறை மேற்கொள்கிறது. 2041ல் எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகை அடிப்படையில், வரைவு முழுமை திட்டம் தயாராகியுள்ளது.இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் சமீரன் முன்னிலை வகித்தார்.தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா பேசுகையில், ''கடந்த, 94ல் வெளியிட்ட 'மாஸ்டர் பிளானில்' நில உபயோக வகை மாற்றம் தொடர்பாக, இதுவரை, 500க்கும் மேற்பட்ட முறை திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நகர ஊரமைப்புத்துறை தொடர்பாக பலருக்கும் தெரிவதில்லை. உயர்கல்வித்துறை மூலமாக இளம்தலைமுறையினருக்கு தெரிவிக்க பாடத்திட்டமாக கொண்டு வருவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்,'' என்றார்238 ச.கி.மீ., விஸ்தரிப்புநகர ஊரமைப்புத்துறையினர் பேசியதாவது:கடந்த, 1994 முதல் நடைமுறையில் உள்ள, கோவை 'மாஸ்டர் பிளான்'1,288 சதுர கி.மீ., பரப்பு கொண்டதாக இருக்கிறது. மாநகராட்சியை சேர்த்து, 22 நகரங்கள் மற்றும், 69 கிராமங்களை உள்ளடக்கி, 1,526 சதுர கி.மீ., பரப்புக்கு புதிய 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. 238 சதுர கி.மீ., விஸ்தரிக்கப்பட உள்ளது.


சரவணம்பட்டி, காரமடை, பெரியநாயக்கன்பாளையம், விளாங்குறிச்சி, காளப்பட்டி, சூலுார், கருமத்தம்பட்டி, நீலாம்பூர் ஆகியவை வளர்ந்து வரும் பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன.வெள்ளலுாரில் ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் கட்டும் பணி நடந்து வருகிறது. எதிர்காலத்தில் நீலாம்பூர் மற்றும் வெள்ளமடையில் பஸ் 'டெர்மினல்' ஏற்படுத்துவதற்கான திட்டம் இருக்கிறது. நரசிம்மநாயக்கன்பாளையம் முதல் பல்லடம் வரை, மதுக்கரை - செலக்கரிச்சல், விளாங்குறிச்சி - புளியம்பட்டி, வெள்ளக்கிணறு - மயிலம்பட்டி, நீலாம்பூர் முதல் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுச்சாலை மற்றும் பெரியநாயக்கன்பாளையம் முதல் சின்னவேடம்பட்டி வரை இணைப்பு சாலைகள் உருவாக்க, அரசுக்கு பரிந்துரைக்கப்பட உள்ளது.நவ., இரண்டாவது வாரத்தில், வரைவு மாஸ்டர் பிளான், அரசிடம் சமர்ப்பிக்கப்படும். 2022, பிப்., 15ல் வெளியிடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.நகர ஊரமைப்புத்துறை இயக்குனர் சரவணவேல்ராஜ், மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், நகர ஊரமைத்துறை இணை இயக்குனர் வாழவந்தான் உட்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.'இண்டஸ்ட்ரி ஜோன்'தொழில்துறையினர் கூறுகையில், 'நகர ஊரமைப்புத்துறையில் ஊழியர் பற்றாக்குறை நீடிக்கிறது. கோப்புகள் தேங்குகின்றன. மின் உபயோகம் மற்றும் குடிநீர் தேவையை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் குடியிருப்புகளுக்கு வரிச்சலுகை அளிக்க வேண்டும். திட்டச்சாலைகளை உருவாக்கி, நகர பகுதியில் உள்வட்டச்சாலை ஏற்படுத்தினால், பிரதான ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். கரூர் பைபாஸ் உருவாகும் வழித்தடத்தில் எதிர்காலத்தில் தொழிற்சாலைகள் அமைக்க வாய்ப்பிருப்பதால், 'இண்டஸ்ட்ரி ஜோன்'அறிவிக்கலாம். மெட்ரோ ரயில் கோவைக்கு மிக முக்கியம் என்பதால், அவிநாசி ரோட்டில் கட்டும் பாலம் பணியை தற்போது நிறுத்தி வைக்க வேண்டும்.


டிசைனை மாற்ற முடியாவிட்டால், 'மெட்ரோ ரயில்' இயக்குவதற்கான வாய்ப்புகளை பரிசீலிக்க வேண்டும்' என்றனர்.'நிதி கொடுக்கத் தயார்'முதன்மை செயலர் ஹிதேஷ் குமார் மக்வானா பேசுகையில், ''மாஸ்டர் பிளான் இதுவே இறுதியானது அல்ல. எதிர்பார்க்கப்படும் மக்கள் தொகைக்கேற்ப, பாதாள சாக்கடை திட்டத்தை மேம்படுத்துவது, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் உருவாக்குவது தொடர்பாக, நகர ஊரமைப்புத்துறையினர் திட்டமிட வேண்டும். பகுதி வாரியாக, சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டி, மறுசுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும். நீர்நிலைகளின் பரப்பு சுருக்கப்பட மாட்டாது. திட்டச்சாலைகள் உருவாக்க முன்மொழிவு வந்திருக்கிறது; நிதி ஒதுக்கத் தயாராக இருக்கிறோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X