தேவர் ஜெயந்தி செல்ல வழித்தடங்கள் அறிவிப்பு | விருதுநகர் செய்திகள் | Dinamalar
தேவர் ஜெயந்தி செல்ல வழித்தடங்கள் அறிவிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
01:59

விருதுநகர் : கலெக்டர் அலுவலகத்தில் தேவர் ஜெயந்தி, குருபூஜை முன்னிட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடந்தது.



எஸ்.பி.,மனோகர் முன்னிலை வகித்தார். இதில் பசும்பொன் செல்லும் வாகனங்கள் வழித்தடங்களை கலெக்டர் தெரிவித்தார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது: தேவர் ஜெயந்தி அன்று மரியாதை செலுத்த செல்ல விரும்பும் தலைவர்கள், பிரதிநிதிகள் 5 நபர்களுக்கு மிகாமல் செல்ல வேண்டும்,இதற்காக ராமநாதபுரம் கலெக்டரிடம் முன் அனுமதி, வாகன அனுமதி பெற வேண்டும். இதற்கு அக். 24க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.



செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பொருத்தி செல்ல கூடாது. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளை துாண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டி செல்லவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சிவகாசி, சாத்துார், விருதுநகர், துாத்துக்குடி, கோவில்பட்டி, திருநெல்வேலி பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை காந்தி நகர், ராமலிங்கா மில், கல்லுாரணி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, கமுதி விலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.



ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதிகளிலிருந்து செல்லும் வாகனங்கள் கல்குறிச்சி, பாலையம்பட்டி, பைபாஸ், காந்தி நகர், ராமலிங்காமில், கல்லுாரணி, எம்.ரெட்டியபட்டி, மண்டபசாலை, கமுதி விலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று திரும்ப வேண்டும். திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் ராமலிங்கா மில், கல்லுாரணி, கமுதி விலக்கு, கமுதி வழியாக பசும்பொன் சென்று அதே வழியில் திரும்ப வேண்டும்.



நரிக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனுார், அபிராமம் வழியாக பசும்பொன் சென்று, திரும்பும் போது பசும்பொன், கோட்டை மேடு, நகரத்தார்குறிச்சி, அபிராமம் வழியாக பார்த்திபனுார், பிடாரிசேரி, வீரசோழன் விலக்கு வழியாக வர வேண்டும். முத்துராமலிங்கபுரம்புதுார், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதி கிடையாது, என்றார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், சப் கலெக்டர் பிருத்விராஜ் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X