ராஜபாளையம் : விருதுநகர் மாவட்டத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி பொது இடங்களில் ஓட்டுநர்களின் கவனத்தை சிதைக்கும் வகையில் வைக்கப்படும் விளம்பர பலகைகள், பேனர்களால் விபத்துகளுக்கு வழி வகுக்கிறது.மாவட்டத்தில் பொது இடங்கள், ரோடு ஓரங்கள், கட்டடங்களிலும் விளம்பர பலகைகள் அமைக்க அரசு பல்வேறு விதிமுறைகள் வகுத்துள்ளது.
உள்ளாட்சி நிர்வாகம் போலீஸ் பரிந்துரையுடன் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தபின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே அமைக்க முடியும். தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் விளம்பர பலகை அமைக்க அனுமதி இல்லை.ஆனால் தற்போது ரோடு ஓங்களை யொட்டிய தனியார் நிலம், கட்டடத்தின் மீது விளம்பர பலகை அமைப்பது அதிகரித்து வருகிறது. விளம்பர பலகை அமைப்பதற்கான இடைவெளி அதன் அளவு உயரம் வரையறுக்கப்பட்டு கலெக்டர் அனுமதி பெற்றாலும் உள்ளாட்சி நிர்வாகத்தில் கட்டணம் செலுத்த வேண்டும்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அதிகாரிகள் இதை ஆய்வுசெய்து அனுமதியற்ற விளம்பர பேனர்களை அப்புறப்படுத்த வேண்டும். இதற்கு மாறாக உள்ளாட்சிகளின் மறைமுக ஆதரவுடன் பல்வேறு இடங்களில் விளம்பர பலகைகள் ,பேனர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மின் கம்பங்கள், கடைகள் , பொது இடங்களிலும் பிளக்ஸ் போர்டுகள் கட்டி தொங்க விடுகின்றனர். இதுதவிர கட்டடங்களின் மேலும் நிரந்தரமாக கம்பிகளை அமைத்து விளம்பர பிளக்ஸ் வைக்கின்றனர்.இதன் மூலம் விபத்துக்குள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
உள்ளாட்சி அதிகாரிகள் இதை கண்காணித்து அகற்ற முன் வர வேண்டும் எல்லாமே கண்துடைப்புமாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் விதி மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கவன சிதறல் ஏற்பட்டு விபத்துக்கு உள்ளாகின்றனர். கண்துடைப்பு நடவடிக்கையை கைவிட்டு கட்டட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பதுடன் தொடர் கண்காணிப்பையும் துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.ராமசுப்பு, தொழில் முனைவோர், ராஜபாளையம்............