லாரி மோதி மாணவர் பலி கிராம மக்கள் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:21

கண்டமங்கலம்-கண்டமங்கலம் அருகே லாரி மோதி பைக்கில் தங்கையுடன் சென்ற பிளஸ் 1 மாணவர் இறந்தார். கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.கண்டமங்கலம் அடுத்த கொடுக்கூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம்; விவசாயி. இவரது மகன் அகிலன், 16, சித்தலம்பட்டு அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்தார். இவரது தங்கை ஆர்த்தி, 15, அதே பள்ளியில் பத்தாம் வகுப்பும் படித்து வந்தார்.நேற்று மாலை பள்ளி முடிந்து இருவரும் பைக்கில் வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தனர். மாலை 4.50 மணிக்கு கொடுக்கூர் ஏரிக்கரை அருகே சென்றபோது, எதிரே திருவக்கரையில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றி வந்த டாரஸ் லாரி, பைக் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட அகிலன் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். ஆர்த்தி படுகாயம் அடைந்தார்.அக்கம் பக்கம், உள்ளவர்கள் ஓடிவந்து ஆர்த்தியை மீட்டு கோரிமேடு ஜிப்மருக்கு அனுப்பினர்.சாலை மறியல்இதனால், ஆத்திரமடைந்த கொடுக்கூர் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் திருவக்கரை - திருக்கனுார் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது கிராம மக்கள் திருவக்கரை பகுதியில் உள்ள மலைகளில் இருந்து கருங்கல் ஜல்லி ஏற்றிச்செல்லும் லாரிகளால் எங்கள் பகுதியில் சாலை விபத்துக்கள் தொடர் கதையாக உள்ளது. பலர் பலியாகியுள்ளனர். கருங்கல் லோடு லாரிகளை வேறு வழியில் திருப்பிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக இன்ஸ்பெக்டர் உறுதியளித்தை ஏற்று மறியலை கைவிட்டனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X