17 பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:21

புதுச்சேரி-பல்வேறு துறைகளில் பணியாற்றும் 17 பி.சி.எஸ்., அதிகாரிகள், கூடுதல் பொறுப்புடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.புதுச்சேரி உயர் கல்வித் துறை சிறப்பு பணி அதிகாரி சுந்தரராஜன், வேளாண், கால்நடை துறை துணை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பேரிடர் மேலாண் துறை துணை கலெக்டர் தமிழ்செல்வனுக்கு, எழுது பொருள் அச்சகத் துறையின் இயக்குனராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி சக்திவேல், குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஸ்பின்கோ மேலாண் இயக்குனர் பணியை கூடுதலாக கவனிப்பார் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் ராகினி, புதுச்சேரி கூட்டுறவுத் துறை இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குனர் சுபாஷ், காரைக்கால் ஜெயபிரகாஷ் நுாற்பாலை மேலாண் இயக்குனர் பொறுப்பினை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குனர் அசோகன், புதுச்சேரி சிறைச்சாலை தலைமை கண்காணிப்பாளராகவும், வீட்டு வசதி வாரிய சார்பு செயலாளர் ஏழுமலை, பொதுப்பணி, சுற்றுச்சூழல் சார்பு செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.எழுது பொருள், அச்சக சார்பு செயலாளர் கார்த்திகேயன் உள்ளாட்சித் துறை துணை இயக்குனராகவும், அங்கிருந்த துணை இயக்குனர் அழகேசன் பொதுப்பணித் துறை சிறப்பு பணி அதிகாரியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பதிவு உயர்வு பெற்ற பி.சி.எஸ்.,அதிகாரி குபேர சிவக்குமார், காவல் துறை சிறப்பு பணி அதிகாரியாகவும், உழவர்கரை நகராட்சி ஆணையர் சந்திரகுமரன், முப்படை நலத் துறை இயக்குனராகவும், மீன்வளத் துறை இயக்குனர் முத்து மீனா, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குனராகவும், மின் துறை சார்பு செயலர் கனி, எழுது பொருள் அச்சகத் துறை சார்பு செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.கரைக்கால் நகராட்சி ஆணையர் காசிநாதன் புதுச்சேரி அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், வேளாண், கால்நடை, துறைமுகத் துறை சார்பு செயலர் முருகேசன், மின் துறை சார்பு செயலராகவும், சுகாதாரத் துறை சிறப்பு பணி அதிகாரி பாலசுந்தரி, வேளாண் துறை நிர்வாக துணை இயக்குனராகவும், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரி தயாளன், பாட்கோ மேலாண் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்கான உத்தரவை கவர்னரின் ஒப்புதலின்படி தலைமை செயலர் அஸ்வனிகுமார் பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X