பல்வேறு துறை அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பு அடிப்படையில் பதவி உயர்வு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:22

புதுச்சேரி-பல்வேறு துறைகளில் பணியாற்றும் பத்து அரசு அதிகாரிகளுக்கு பொறுப்பு அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப் பட்டுள்ளது. புதுச்சேரி பி.சி.எஸ்., அதிகாரிகள் பணியிடங்கள் 50 சதவீதம் மத்திய தேர்வாணையம் மூலம் நேரடியாக நிரப்பப்படுகிறது. மீதமுள்ள 50 சதவீதம் தாசில்தார், கண்காணிப்பாளர் உள்பட 17 துறைகளில் சீனியாரிட்டி அடிப்படையில் இருந்து பதவி உயர்வு அளித்து நிரப்பப்படுகிறது.இந்நிலையில், பி.சிஎஸ்., பதவி உயர்வுக்கான பட்டியலில் இடம் பிடித்து இருந்த அட்டவணை -2 அதிகாரிகளுக்கு தற்போது பொறுப்புகள் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.இவர்கள், தற்போது பி.சி.எஸ்., அதிகாரிகள் கவனிக்கும் பொறுப்புகள் வழங்கி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறை கண்காணிப்பாளர் சாந்தி, புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்று திறனாளிகள் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.தொழில் துறை உதவி இயக்குனர் மோகன்குமார், வில்லியனுார் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர் தொழில் துறை உதவி இயக்குனர் பொறுப்பினர் கூடுதலாக கவனிப்பார்.காவல் துறை கண்காணிப்பாளர் சாவித்ரி, சுகாதார நலவழித் துறை சிறப்பு பணி அதிகாரியாகவும், வருவாய் பேரிடர் மேலாண்மை துறை தாசில்தார் ரவிச்சந்திரன், குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குனராகவும் இடமாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.பள்ளி கல்வித் துறை கண்காணிப்பாளர் அருணகிரிநாதன் காரைக்கால் கோவில்கள் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரியாக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.மேலும் நில அளவை பதிவேடு துறை தாசில்தார் பாலாஜி, புதுச்சேரி மீன்வளத் துறை இயக்குனராகவும், காரைக்கால் வருவாய் துறை கண்காணிப்பாளர் செந்தில்நாதன், காரைக்கால் நகராட்சி ஆணையராகவும், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜ், உழவர்கரை நகராட்சி ஆணையராகவும், புதுச்சேரி தலைமை செயலக கண்காணிப்பாளர் கந்தன், கலை பண்பாட்டுத் துறை இயக்குனராகவும், வருவாய் துறை தாசில்தார் சவுமியா, பள்ளி கல்வித் துறை சிறப்பு பணி அதிகாரியாகவும் பதவி உயர்வுடன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கவர்னரின் ஒப்புதலின்படி தலைமை செயலர் அஸ்வனிகுமார் பிறப்பித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X