பா.ம.க., மாவட்ட செயலாளர் படுகொலை: காரைக்காலில் பதட்டம்; போலீசார் குவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 அக்
2021
15:17
பதிவு செய்த நாள்
அக் 23,2021 03:23

காரைக்கால்: கட்சி அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தினால் காரைக்காலில் பதட்டம் ஏற்பட்டுள்ளதால், கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



காரைக்கால் திருநள்ளாறு மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் தேவமணி, 45; காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர். இவர், நேற்றிரவு 10.30 மணியளவில் திருநள்ளாறு தேரடி வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு பைக்கில் புறப்பட்டார்.திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாய்த்து அருகே அவர் பைக்கை பின்தொடர்ந்து 3 பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் தேவமணியை திடீரென வழிமறித்தது.



தன்னை கொல்ல திட்டமிட்டு கும்பல் வழிமறிப்பதை அறிந்த தேவமணி தப்பிக்க பைக்கினை போட்டு விட்டு அலறியபடி தப்பி ஓட முயன்றார்.அந்த கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் கை, தலையில் வெட்டுகள் விழுந்தது. பலத்த காயமடைந்த தேவமணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.தேவமணியின் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டனர். இதனை கண்டதும் கொலை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது. அவரை மீட்ட பொதுமக்கள் காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றின்றி 11.10 மணியளவில் உயிரிழந்தார்.



இதுகுறித்து தகவல் அறிந்ததும் எஸ்.பி., கள்., வீரவல்லபன், ரகுநாயகம், திருநள்ளாறு இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி, பாலமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மேலும் சீனியர் போலீஸ் நிகாரிகா பட் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி கொலை செய்யப்பட்டதும், பா.ம.க., நிர்வாகிகள் தொண்டர்கள் காரைக்கால் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்த அங்கு திடீர் பதட்டம் ஏற்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க அனைத்து நடவடிக்களும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்து, அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.




கொலை செய்யப்பட்ட காரைக்கால் பா.ம.க., மாவட்ட செயலாளர் தேவமணி மீது கொலை முயற்சி உள்பட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. காரைக்காலில் எந்த பிரச்னையாக இருந்தாலும் முதல் ஆளாக முன் நின்று தீர்க்க முயல்வார். பொது பிரச்னையிலும் முன் நின்று வழக்கு தொடர்ந்தார். கொரோனா நோய் பரவதால் புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்இதன் காரணமாக காரைக்கால் மட்டுமின்றி தமிழகத்திலும் நிறைய எதிரிகள் உருவாகினர்.



இந்நிலையில் எந்த பிரச்னையில் தேவமணி கொலை செய்யப்பட்டார் என தீவிர விசாரணையை திருநள்ளார் போலீசார் நடத்தி வருகின்றனர். தேவமணி கொலை சம்பவத்தை தொடர்ந்து பைக் எண்களை கொண்டு காரைக்கால் எல்லை பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டு, விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது. கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த கொம்யூன் பஞ்சாய்த்து அலுவலகம் அருகே உள்ள சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கைப்பற்றிய போலீசார் கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



கொலை செய்யப்பட்ட தேவமணிக்கு மலா 40 என்ற மனைவியும் ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த கொலை சம்பவத்தினால் காரைக்காலில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அங்கு கலவரம் நடக்காமல் தடுக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.



தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதானவர்




காரைக்கால் மாவட்ட பா.ம.க., தேவமணி இலங்கை அகதிகளை படகில் அனுப்ப முயன்ற வழக்கில் கடந்த 2010 ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காரைக்கால் சிறையில் அடைக்கப்பட்டார்.



இட பிரச்னை காரணமா?




அண்மையில் தேவமணி வீட்டிற்கு எதிரில் உள்ள இடம் சம்பந்தமாக அவருக்கும், மற்றொரு தரப்பினருக்கு இடையே பிரச்னை இருந்து வருகிறது. இந்த இடம் சம்பந்தமான வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த இட பிரச்னை சம்பந்தமாக அவர் கூலி படை ஏவி கொலை செய்யப்பட்டரா என, திருநள்ளாறு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X