தார் சாலை போடக்கோரி கிராம மக்கள் மறியல் | விழுப்புரம் செய்திகள் | Dinamalar
தார் சாலை போடக்கோரி கிராம மக்கள் மறியல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:34

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காரப்பட்டு கிராமத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 1.50 கி.மீ., துாரத்திற்கு தார் சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில், 400 மீட்டர் துாரத்திற்கு வனத்துறைக்கு சொந்தமான பகுதி உள்ளதால் அந்த இடத்தில் சாலை போடாமல் அதிகாரிகள் நிறுத்தினர்.இந்நிலையில்நேற்று, மீதமுள்ள சாலையை முழுதும் போட வலியுறுத்தி அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் ராஜிவ்காந்தி மற்றும் கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அதிகாரிகள் வனத்துறை அனுமதி இல்லாததால் சாலை போட முடியாது என கூறியதால் கிராம மக்கள் அரசூர் - பண்ருட்டி சாலையில் மாலை 4:00 மணியளவில் சாலை மறியல் ஈடுபட்டனர்.டி.எஸ்.பி., ஆனந்தராஜ், உளுந்துார்பேட்டை வனச்சரகர் காதர்பாட்ஷா, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராகுல் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி ஓரிரு நாட்களில் சாலை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் விழுப்புரம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X