நபார்டு வங்கியின் ரூ.4,648.32 கோடிக்கான வங்கி கடனுக்கான திட்டம் | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
நபார்டு வங்கியின் ரூ.4,648.32 கோடிக்கான வங்கி கடனுக்கான திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:36

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு நபார்டு வங்கி தயாரித்த 4,648.32 கோடி ரூபாய்க்கான வங்கிக் கடன் திட்டத்தை கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளர்கள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் (மாவட்ட வளர்ச்சி) பாமா புவனேஸ்வரி முன்னிலை வகித்தார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் வரவேற்றார்.திட்ட அறிக்கையினை வெளியிட்ட கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில், 'நபார்டு வங்கி மூலம் 2022 - 23ம் ஆண்டிற்கான கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் வளம் சார்ந்த வங்கி கடன் 4,648.32 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு கடன் திட்டத்தைக் காட்டிலும் 4.87 சதவீதம் கூடுதலாகும்.வங்கிகள் விவசாய கடன்கள் வழங்க வேண்டும். விவசாயிகளை பயிர்க் கடன் திட்டத்தின் கீழ் இணைக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கான கடன் திட்டத்தை வங்கிகள் வழங்கிட வேண்டும்' என்றார்.அனைத்து வங்கி மேலாளர்கள், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) தேவநாதன், நகராட்சி கமிஷனர் குமரன், மீன்வளத்துறை, மாவட்ட தொழில் மையம் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X