பூட்டியுள்ள சுகாதார வளாகம்; கழிவுநீர் வெளியேறாத கால்வாய் தேனி-அல்லிநகரம் நகராட்சி 9வது வார்டு அவலம் | தேனி செய்திகள் | Dinamalar
பூட்டியுள்ள சுகாதார வளாகம்; கழிவுநீர் வெளியேறாத கால்வாய் தேனி-அல்லிநகரம் நகராட்சி 9வது வார்டு அவலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:58


தேனி : தேனி-அல்லிநகரம் நகராட்சி 9வது வார்டில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பூட்டியுள்ள சுகாதார வளாகம், குப்பை சூழ்ந்து கழிவுநீர் வெளியேறாத கால்வாயால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.



தேனி அல்லிநகரம் நகராட்சி 9வது வார்டில் வெங்கலா நகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சில இடங்களில் சிமென்ட் ரோடு, சாக்கடை கால்வாய் வசதி இல்லை. இதனால் வீடுகளின் முன்புறம் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. குப்பை முறையாக அகற்றப்படாததால் அம்பேத்கர் தெற்கு தெரு கால்வாய் குப்பைகள் குவிந்து துார்நாற்றம் வீசி சுகாதார கேடு நிலவுகிறது.வெங்கலா நகரில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டு 2004ல் திறக்கப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதார வளாகம் பூட்டியே உள்ளது. இப்பிரச்னைகளை அதிகாரிகள் தீர்க்க வேண்டும் என அந்தபகுதி மக்கள் எதிர்ப்பார்த்துள்ளனர்.



செயல்படாத சுகாதார வளாகம்முத்தையா, அம்பேத்கர் தெற்கு தெரு: இங்குள்ள சுகாதார வளாகம் யாருக்கும் பயன்படாத வகையில் பூட்டப்பட்டுள்ளது. தண்ணீர் பிரச்னை உள்ளதால் சுகாதார வளாகம் செயல்படவில்லை. இதுபற்றி பலமுறை புகார்கள் அளித்தாலும் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. இனியாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் காட்சி பொருளாக உள்ள சுகாதார வளாக கட்டடதை அங்கன்வாடி, ரேஷன்கடையாக மாற்றம் செய்ய வேண்டும்.



பூங்காவாக உருமாற்றினால் கூட சிறுவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.பாதாள சாக்கடை தேவைசெல்வி, அம்பேத்கர் தெற்கு தெரு: ஒரு ஆண்டுக்கு முன்பு சாக்கடை கால்வாய் துார்வாரப்பட்டது. ஆனால் முறையாக பராமரிக்கவில்லை. இதனால் குப்பை குவிந்து கழிவுநீர் செல்ல தடை ஏற்பட்டுள்ளது. தெருக்களில் சாக்கடை வசதி இல்லாததால் சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியில் வாழும் நிலை உள்ளது. கொசுக்களால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைகிறோம். பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்தினால் தீர்வு கிடைக்கும்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X