வெறிநாய் கடித்து சிறுவன் பலி  | தேனி செய்திகள் | Dinamalar
வெறிநாய் கடித்து சிறுவன் பலி 
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
03:59

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் வெறிநாய்கடித்து ஆரம்பசுகாதாரநிலையத்தில் தடுப்பூசி செலுத்தி சிகிச்சைப்பெற்ற சிறுவன் பாலகேஸ்வரன் பலியானார்.



தேவதானப்பட்டி மேட்டுவளவு சேர்ந்த முத்துப்பாண்டி மகன் பாலகேஸ்வரன் 6. அக்.6ல் விளையாடிக்கொண்டிருந்த போது வெறிநாய் கழுத்தில் கடித்தது. பெரியகுளம் அரசு மருத்துவமனையில் பாலகேஸ்வரனுக்கு, முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின் தேவதானப்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் அடுத்த இரு டோஸ்களும் செலுத்தப்பட்டது.



இந்நிலையில் பாலகேஸ்வரன் நேற்று முன்தினம் இறந்தார்.நாய்தொல்லை அதிகரிப்பு: தேவதானப்பட்டி பேரூராட்சியில் நாய்கள் அதிகளவில் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் கருத்தடை ஆப்பரேஷன் செய்ய வேண்டும். 5 ஆண்டுகளாக பேரூராட்சியில் நடவடிக்கை இல்லை. அனைத்து வார்டுகளிலும் நாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. வட்டார மருத்துவ அலுவலர் கோமதி கூறுகையில்: நாய் கடியால் பாலகேஸ்வரன் இறந்த தகவல் எனக்கு வரவில்லை. விபரங்களை கேட்டு தெரிவிக்கிறேன் என்றார்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X