தேனி : தேனி எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் 35 ஆண்டுகளாக 600 குடும்பங்கள் வசிக்கின்றன. பட்டா இல்லாததால் மக்கள் சிரமப்பட்டனர்.
இந்நிலையில் தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன் தலைமையில் தேனி நகர பொறுப்பாளர் பாலமுருகன் முன்னிலையில் பட்டா வேண்டிய மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டன. பட்டா பெற்று தருவதாக உறுதிஅளித்தனர்.