ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு | தேனி செய்திகள் | Dinamalar
ஒன்றியக்குழு துணைத்தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
04:10

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு - மயிலாடும்பாறை ஒன்றியத்தில் நேற்று நடக்க இருந்த ஒன்றியக்குழு துணைத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.



இந்த ஒன்றியத்தில் தி.மு.க.,சார்பில் 11 பேர், அ.தி.மு.க.,சார்பில் ஒன்றியக்குழு தலைவர் உட்பட 3 கவுன்சிலர்கள் உள்ளனர். நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு தேர்தல் நடப்பதாக இருந்தது. ஒன்றிய கவுன்சிலர்கள் பலரும் காத்திருந்தனர். இந்நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் பரமசிவம் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்து, அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டது.



இதனை தொடர்ந்து ஒன்றியக்குழு தலைவர் சந்திரா, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முருகன், அன்னபூரணி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது குறித்து பி.டி.ஓ.,சரவணன் மற்றும் அதிகாரி களிடம் வாக்குவாதம் செய்து தகாத வார்த்தைகளில் திட்டினர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஒன்றிய பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் குமரேசன், எஸ்.ஐ.,க்கள் சதீஷ், அருண்பாண்டி பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அலுவலர்கள் பணிகளுக்கு திரும்பினர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X