கருணாநிதி பகீரத பிரயத்தனம்! மாவட்ட ஊராட்சி தலைவர்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:08

மொத்தம், 11 இடங்களை உடைய காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சியில், தி.மு.க., ஒன்பது இடங்களை பிடித்தது. கூட்டணி கட்சியான காங்., - ம.தி.மு.க., தலா ஒரு இடத்தில் வென்றன. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவியை, மாவட்டத்தைச் சேர்ந்த குன்றத்துார் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் படப்பை மனோகரன் பிடித்தார். துணைத தலைவர் பதவியை, தி.மு.க.,வின் தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த நித்யா பெற்றார்.



செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி தலைவராக தி.மு.க.,வின் செம்பருத்தி, துணைத்தலைவராக காயத்ரி தேர்வு செய்யப்பட்டனர்.அமைச்சருக்கு 'பெப்பே!'சட்டசபை தேர்தலின் போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க., வென்றது. அங்கு தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்ட ம.தி.மு.க.,வின் மல்லை சத்யா, தி.மு.க.,வினர் உள்ளடியில் தோற்றார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் அன்பரசன், 'சட்டசபை தேர்தலை போன்று உள்ளடி வேலை செய்யாமல், உள்ளாட்சி தேர்தலில் மதுராந்தகத்தை நாம் கைப்பற்ற வேண்டும். இதில் தவறு நடந்தால், யாரையும் சும்மா விடமாட்டேன்' என, வெளிப்படையாகவே கட்சியினரை எச்சரித்திருந்தார். இந்நிலையில், மதுராந்தகம் ஒன்றியத்தில், 22 ஒன்றிய கவுன்சிலர் இடத்தில், தி.மு.க., - 10; அ.தி.மு.க., - 7; பா.ஜ., - 1; சுயேச்சை - 3 பேர் வெற்றி பெற்றிருந்தனர்.



ஒன்றியக்குழு தலைவருக்கான தேர்தலில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கீதா, தி.மு.க.,வைச் சேர்ந்த ஒப்பிலால் மற்றும் தி.மு க.,வின் மற்றொரு வேட்பாளராக பத்மபிரியா ஆகியோர் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க.,வின் கீதா 10 ஓட்டுகளும், பத்மபிரியா 7 ஓட்டுகளும், ஒப்பிலால் 5 ஓட்டுகளும் பெற்றனர். வெற்றிக்கு, 12 உறுப்பினர்கள் தேவை என்ற நிலையில், பெரும்பான்மை நிலையை யாரும் எட்டவில்லை. இதனால் குறைந்த ஓட்டுகள் பெற்ற ஒப்பிலால் போட்டியில் இருந்து விலகினார். தொடர்ந்து, கீதா, பத்மபிரியா இடையே நடந்த தேர்தலில், தி.மு.க., உறுப்பினர்கள் சிலரின் ஆதரவுடன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த கீதா, 15 ஓட்டுகள் பெற்று, ஒன்றிய குழு தலைவரானார்.



எதிர் அணிக்கு ஓட்டளித்து, அமைச்சரின் எச்சரிக்கையை, 'உடன்பிறப்புகள்' காற்றில் பறக்கவிட்டனர். அங்கு ஒன்றியக்குழு துணைத் தலைவராக ஒன்றாவது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அ.தி.மு.க.,வின் குமரவேல் தேர்வு செய்யப்பட்டார்.கருணாநிதி பகீரத பிரயத்தனம்!ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியக்குழு தலைவர் இடத்தை பிடிக்க, தி.மு.க., வேட்பாளர் கருணாநிதி பகீரத பிரயத்தனம் செய்தார்.



ஆனால், சுயேச்சையாக வெற்றி பெற்ற, ரவுடி குணாவின் மனைவி எல்லம்மாள், தி.மு.க., ஆதரவு கவுன்சிலர்கள், சுயேச்சைகளை வளைக்க முயற்சித்தார்.மொத்தமுள்ள ௧௬ ஓட்டுகளில், இருவரும் தலா எட்டு ஓட்டுகளை பெற்று சம இடத்தை பிடித்தனர். இதனால் குலுக்கல் முறையில், வெற்றியாளர் தேர்வு நடந்தது. இதில், கருணாநிதி வெற்றி பெற்று ஒன்றிய குழு தலைவரானார். பெரும் போராட்டத்துக்கு பின், தன் வெற்றி உறுதியானதும், கருணாநிதி கண்ணீர் விட்டு அழுதார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X