புறநகர் பகுதிகளில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம் | சென்னை செய்திகள் | Dinamalar
புறநகர் பகுதிகளில் இன்று தடுப்பூசி சிறப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:19

குரோம்பேட்டை : பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில், இன்று, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.



சென்னை புறநகர் பகுதிகளான, பல்லாவரம், பம்மல், அனகாபுத்துார், திருநீர்மலை, குன்றத்துார், மாங்காடு, பூந்தமல்லி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில், இன்று, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.பல்லாவரத்தில், குரோம்பேட்டை பேருந்து நிறுத்தம், ரயில் நிலையம், பல்லாவரம் மற்றும் அஸ்தினாபுரம் பேருந்து நிறுத்தங்கள், கீழ்க்கட்டளை நகராட்சி பள்ளி என, 30 இடங்களில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளன.

பம்மல் நகராட்சியில், சங்கர் நகர் பூங்கா, காந்தி ரோடு ஆரம்ப சுகாதார நிலையம் என, 8 இடங்களிலும், அனகாபுத்துாரில், அரசு மேல்நிலைப்பள்ளி, ராஜாகோபால் திருமண மண்டபம், சுகாதார நிலையம் என, 15 இடங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. பூந்தமல்லி நகராட்சியில், பேருந்து நிலையம், ஊத்துக்காடு எல்லையம்மன் கோவில், புர்லா தோட்டம் என, 20 இடங்களிலும்; திருநீர்மலையில், குடிசை மாற்று வாரியம், ஆரம்ப சுகாதார நிலையம், அரசு பள்ளி என, 5 இடங்களிலும் முகாம் நடக்கிறது.

குன்றத்துாரில், சேக்கிழார் மணிமண்டபம், அங்கன்வாடி மையம், பொன்னியம்மன் கோவில் என, 10 இடங்களிலும்; மாங்காடு பேரூராட்சியில், எட்டு இடங்களிலும், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.இதே போல், தாம்பரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளிலும், தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, அண்ணா நகர் மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளில், தலா 4 மையங்களில் இன்று தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. அதில், 30 நிரந்தர மையங்களும், 30 இடங்களில் நடமாடும் வாகனங்கள் வாயிலாகவும் முகாம்கள் நடக்கின்றன. அந்தந்த பகுதி மக்கள், முகாம்களை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X