தண்டவாளம் அருகே திடீர் தீ விபத்து | சென்னை செய்திகள் | Dinamalar
தண்டவாளம் அருகே திடீர் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:19

ஆலந்துார் : ஆலந்துார் - -கிண்டி மடுவன்கரை இடையே உள்ள ரயில் தண்டவாளம் அருகே ஏற்பட்ட தீவிபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



ஆலந்துார் - -கிண்டி மடுவின்கரை இடையே உள்ள ரயில் தண்டவாளம் பகுதியில் மேம்பாலம் அமைந்துள்ளது. மேம்பாலத்தின் கீழ் பகுதியில் தண்டவாளம் அருகே குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளன.அங்கு, இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் அதிகமாக நடக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தின் அருகே குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால், அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது.தகவலறிந்து வந்த கிண்டி தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X