கபாலீஸ்வரர் கோவிலில் தங்கத் தேரோட்டம்: அமைச்சர் சேகர் பாபு துவக்கி வைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:22

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நீண்ட இடைவெளிக்குப் பின் நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. தங்கத் தேரில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.



தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், தங்க தேர்கள் உள்ளன. நேர்த்திக் கடன் நிறைவேற்றும் பக்தர்கள் இந்த தங்க தேர் இழுத்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். கொரோனா தொற்று பரவல் காரணமாக, கடந்தாண்டு ஏப்ரல் மாதம் முதல் அனைத்து கோவில்களிலும் தங்க தேர் பவனி நிறுத்தப்பட்டது. கொரோனா முதல் அலை கட்டுக்குள் வந்த நிலையில், ஒரு சில கோவில்களில் மீண்டும் தங்கத் தேர் பவனி நடந்தது.



அதற்குள் இரண்டாவது அலை வேகமெடுத்ததால், தங்கத் தேர் பவனி நிறுத்தப்பட்டதுடன், கோவில்களில், பக்தர்கள் தரிசனத்திற்கும் தடை விதிக்கப்பட்டது. அரசின் தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, கொரோனா தொற்று பரவல் வேகம் குறைந்துள்ளது. இதையடுத்து, ஊரடங்கு தளர்வுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன.



அந்த வகையில், கோவில்களில் அனைத்து நாட்களிலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் தங்கத் தேர் பவனிக்கும் ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன் துவக்கமாக, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று, தங்கத் தேரோட்டம் நடந்தது. இதற்கான கட்டணத்தை செலுத்தி, முதல் நபராக ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முன்பதிவு செய்திருந்தார்.



நிகழ்ச்சியில் குடும்பத்துடன் பங்கேற்ற அமைச்சர் சேகர்பாபு, தங்கத் தேரை இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். தங்கத்தேரில் எழுந்தருளிய உற்சவர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan - chennai,இந்தியா
23-அக்-202118:42:01 IST Report Abuse
Narayanan Please take care of the golden cart , because of Sekar babu . He may take this golden cart too to his Stalin's place .
Rate this:
Cancel
23-அக்-202111:33:19 IST Report Abuse
மதுமிதா தங்க ரதம், தங்க வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X