அமைச்சர், மா.செ., ஆதரவாளர்களுக்கே பதவி; எல்லா இடங்களையும் அள்ளியது தி.மு.க.,; கண்துடைப்பு தேர்தல் என நிர்வாகிகள் குமுறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:34

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில், உள்ளாட்சி பதவிகளுக்கு நேற்று நடந்த மறைமுக தேர்தலில் எதிர்பார்த்தபடியே தி.மு.க.,வினர் வெற்றி பெற்றனர். அமைச்சர், மாவட்ட செயலர், ஒன்றிய செயலர் உறவினர், ஆதரவாளர்களுக்கே, பெரும்பாலான பதவிகள் போட்டியின்றி வழங்கப்பட்டன. வழக்கம் போல, கட்சியின் மூத்த நிர்வாகிகளும், துணைத் தலைவர் பதவி எதிர்பார்த்த கூட்டணி கட்சியினருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது.



தமிழகத்தில், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டமாக நடந்து முடிந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஒன்றியங்களிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்.



தேர்வு




தொடர்ந்து, மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கான மறைமுக தேர்தல், நேற்று நடந்தது.காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியத்தில், ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு, 6வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க.,வை சேர்ந்த உஷா நந்தினியும், 12வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க., மகளிர் அணியைச் சேர்ந்த மலர்விழியும் காய் நகர்த்தினர்.



ஆனால், மாவட்ட அமைச்சர் அன்பரசனின் நிழலாக வலம் வரும் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலர் மனோகரனின் மனைவி சரஸ்வதி, போட்டியின்றி ஒன்றிய குழு தலைவராக தேர்வானார். மற்றொரு புறம், 19வது வார்டில் வெற்றி பெற்ற, ஸ்ரீபெரும்புதுார் காங்கிரஸ் எம்.எல்.ஏ., செல்வபெருந்தகையின் அண்ணன் மகன் மணிகண்டன், ஒன்றியக் குழு துணை தலைவர் பதவிக்கு மோதினார்.



இருப்பினும், ஒன்றிய குழு தலைவர் போன்று, துணை தலைவராக தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலரான வந்தேமாதரத்தின் மனைவி உமாமகேஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.தி.மு.க.,வைச் சேர்ந்த இரண்டு ஒன்றிய செயலர்களின் மனைவியருக்கு, தலைவர், துணை தலைவர் பதவி வழங்கப்பட்டது, தி.மு.க., வினர் மத்தியிலும், கூட்டணியில் காங்கிரஸ் கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியது.



குன்றத்துார் ஒன்றியத்தில், சென்னையை ஒட்டியுள்ள ஊராட்சிகளில், பூந்தண்டலம்,- அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஆதிகேசவன்; பழந்தண்டலம், தி.மு.க.,வைச் சேர்ந்த- தியாகு; திருமுடிவாக்கம் தி.மு.க.,வின் வைத்தியலிங்கம்; சிறுகளத்துார் தி.மு.க.,வின் கோவிந்தராஜ் ஆகியோர் துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.



நந்தம்பாக்கம் தி.மு.க.,வின் ஜீவிதா சுரேஷ்; கொல்லச்சேரியில் தி.மு.க.,வைச் சேர்ந்த- முருகன்; இரண்டாம் கட்டளை அ.தி.மு.க.,வின் பாஸ்கர்; தண்டலம் ஊராட்சியில் அ.தி.மு.க.,வின் கவுதமி; தரப்பாக்கம் தி.மு.க.,வின் சோனியா விநாயகம் துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.



பதவி




பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக தி.மு.க.,வின் சங்கீதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். துணை தலைவராக பிரசாத் தேர்வு செய்யப்பட்டார். முடிச்சூர் ஊராட்சியில் துணைத் தலைவர் பதவிக்கு, தி.மு.க.,வைச் சேர்ந்த விநாயகமூர்த்தி மற்றும் அதே கட்சியின் உமா சுகுமார் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியது.



மறைமுக தேர்தலில் விநாயகமூர்த்தி எட்டு ஓட்டுகளும், உமா சுகுமார், ஐந்து ஓட்டுகளும் பெற்றனர். இதனால், விநாயகமூர்த்தி மூன்று ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. மதுரப்பாக்கம் ஊராட்சியில், தி.மு.க.,வை சேர்ந்த புருஷோத்தமன், அகரம்தென் அரவிந்தன், திருவஞ்சேரி ருக்மணி போட்டியின்றி துணைத் தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.



பரங்கிமலை ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில், திரிசூலத்தில் தி.மு.க.,வின் அமுதா; கவுல்பஜாரில் தி.மு.க.,வின் மோகன்; பொழிச்சலுாரில் தி.மு.க.,வின் ஜோசப் துணை தலைவர்களாக வெற்றி பெற்றனர்.பெரும்பாலும், துணைத் தலைவர்கள் போட்டியின்றியே தேர்வு செய்யப்பட்டனர். அமைச்சர் அன்பரசன் ஆதரவாளர்கள், மாவட்ட செயலர், ஒன்றிய செயலரின் உறவினர்கள், ஆசி பெற்றவர்களுக்கு பதவி வழங்கப்பட்டது.



போட்டி இருந்த சில இடங்களிலும், கண்துடைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டதே தவிர, பதவிய முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டவை தான் என்பதால், கட்சியினர், கூட்டணி கட்சியினர் அதிருப்தியடைந்தனர்.



ரவுடி மனைவி 'மாஸ்' வெற்றி!




காட்டாங்கொளத்துார் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நெடுங்குன்றம் ஊராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இதில், 9வது வார்டில், சுயேச்சையாக களம் இறங்கிய விஜயலட்சுமி, போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவர் பிரபல ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் மனைவி. சூர்யா, சமீபத்தில் பா.ஜ.,வில் இணைந்தவர்.



விஜயலட்சுமி மீது கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளது. கடந்த, 20ம் தேதி நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் வார்டு உறுப்பினராக விஜயலட்சுமி பதவியேற்றார். அதே நிகழ்ச்சியில், ஓட்டேரி போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். ஆனாலும், அவரை எதிர்த்து யாரும் போட்டியிட முன்வரவில்லை.



இந்நிலையில், நேற்று நடந்த நெடுங்குன்றம் ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில், சிறையில் இருந்த படியே விஜயலட்சுமி, போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்.



- -நமது நிருபர் குழு- -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X