100 நாட்களில் 100 புத்தக விமர்சனம்: அசத்தும் 'ஆன்லைன்' பயிற்சியாளர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
06:34

சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர், விமல் தியாகராஜன். பல்வேறு உயர் நிறுவனங்களில் பணிபுரிந்தவர். தற்போது 'பி பாசிடிவ் ட்ரெயினிங் அகாடமி' என்ற பெயரில் சொந்தமாக பயிற்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.



இதன் வாயிலாக, கல்லுாரி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு பல வகை ஆளுமை பயிற்சிகளை வழங்கி வருகிறார்.தமிழ், ஆங்கிலம், ஹிந்தி மொழி வழியாக இவர் நடத்தும் பயிற்சி வகுப்பில், இதுவரை 8,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். தற்போது, 'ஆன்லைன்' வாயிலாக, 21 மணி நேரத்தில் ஹிந்தி கற்கலாம் என்பது போன்ற வித்தியாசமான வகுப்புகளை நடத்துகிறார்.



இது போன்ற வகுப்புகளுக்கு தேவையான பாடக்குறிப்புகளுக்காக, நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட இவர், இன்றைய தலைமுறைக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், 'லீட் டூ ரீட்' என்ற பெயரில் புதுமையான நிகழ்ச்சி நடத்த முடிவு செய்தார்.அதன்படி, உலகில் உள்ள பிரபலமான தன்னம்பிக்கை தரும், 100 ஆங்கில புத்தகங்களை படித்து, அதன் சாரத்தை எட்டில் இருந்து 10 நிமிடத்திற்குள், 'வீடியோ'வாக தமிழில் அறிமுகம் செய்து வருகிறார்.



புத்தகத்தை படிக்கும்போதே, தேவையான குறிப்பு எடுத்துக் கொண்டு, அந்த குறிப்புகளின் அடிப்படையில், புத்தகத்தின் சாரத்தை, சாறு பிழிந்து சுவராசியமாக கொடுக்கிறார்.



வரவேற்பு



உண்மையில் இது மிகவும் சிரமமான காரியம். அந்த எட்டு நிமிட வீடியோவிற்காக, ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வேலை பார்க்கிறேன் என்கிறார். 100 நாளைக்கு 100 வீடியோ என்ற தலைப்பில், இதுவரை 73 புத்தகங்களை படித்து வீடியோவாக பதிவிட்டுள்ளார்.'நிர்வாக மேலாண்மை, நிதி நிர்வாகம், திருமணத்திற்கு பின் காதல் கசக்கிறதா?பார்க்கும் வேலை போராடிக்கிறதா?' என்று ஒன்றுக்கு ஒன்று சம்பந்தமில்லாத தலைப்புகளில், யுடியூபில் இவர் பதிவிடும் வீடியோ, பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.



எட்டில் இருந்து 10 நிமிட வீடியோவை, மூன்று பகுதிகளாக பிரித்து உள்ளார். ஒரு பகுதி, புத்தகம் எழுதிய ஆசிரியர் பற்றியது. இது புத்தகம் வாங்கி படிக்க விரும்புபவர்களுக்கு உதவும்.



உற்சாகம்



அடுத்து, புத்தகம் சொல்லும் கருத்தை இவர் சுவராசியமாக சொல்வது. மூன்றாவது, ஒரு புதிரோடு முடிக்கிறார்; புதிர் பார்வையாளர்களை உற்சாகப்படுத்துகிறது.தன் இந்த முயற்சிக்கு மனைவி சிவரஞ்சனி பெரிதும் உதவியாக இருப்பதாக கூறும் விமல் தியாகராஜனின் வீடியோவை https://youtube.com/c/BePositiveTamil என்ற லிங்க்கை பயன்படுத்தி, யுடியூபில் காணலாம்.



இவரை, 98409 36201 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X