எம்.எல்.ஏ., வீட்டின் முன் சாலை மறியல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
09:47



உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ., வீட்டின் முன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.





கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஒன்றியம், ஆதனுார் ஊராட்சித் தலைவராக சாமுண்டீஸ்வரி வெற்றி பெற்றார்.ஊராட்சி துணைத் தலைவருக்கான தேர்தல் நேற்று நடந்தது. அப்போது துணைத் தலைவர் பதவிக்கு வார்டு உறுப்பினர்களான கிளாப்பாளையம் சத்யா, ஆதனுார் பழனியம்மாள் இடையே கடும் போட்டி ஏற்பட்டது.இதில் ஊராட்சித் தலைவரான சாமுண்டீஸ்வரி, ஆதனுார் வார்டு உறுப்பினர் பழனியம்மாளுக்கு ஆதரவு அளித்தார்.



இதனால் அதிருப்தியடைந்த கிளாப்பாளையம் சத்யா தரப்பினர் 50க்கும் மேற்பட்டோர், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன் என்பவரால் தான் துணைத் தலைவர் பதவி தங்களுக்குக் கிடைக்கவில்லை என ஆவேசம் அடைந்தனர்.மேலும், உளுந்துார்பேட்டை நகர் பகுதியில் உள்ள தி.மு.க., எம்.எல்.ஏ., மணிக்கண்ணன் வீட்டின் முன் நேற்று மதியம் 1:00 மணியளவில் உளுந்துார்பேட்டை - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அப்போது எம்.எல்.ஏ.. ஆதரவாளர்கள் மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து போகும்படி கூறியதால் இருதரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவியது.டி.எஸ்.பி., மணிமொழியன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து, மதியம் 1:40 மணியளவில் மறியலை கைவிட்டனர்.பின், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அனுப்பி வைத்தார்.

 

Advertisement
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X