இரும்பு தொழிற்சாலை விபத்தில் தொழிலாளி பலி : புதுச்சேரி அருகே தடியடி: 3 போலீசார் படுகாயம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
10:21



வில்லியனுார் : புதுச்சேரி அருகே இரும்பு தொழிற்சாலையில் செயின் பிளாக் அறுந்து விழுந்ததில் மேற்கு வங்க தொழிலாளி தலை நசுங்கி இறந்தார். போலீசார் தடியடி நடத்தி உடலை மீட்டதால், ஆவேசமடைந்த தொழிலாளர்கள் தாக்கியதில் மூன்று போலீசார் படுகாயமடைந்தனர். போலீஸ் ஜீப் உள்ளிட்ட 5 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் பதட்டம் நிலவி வருகிறது.






புதுச்சேரி மாநிலம், சேதராப்பட்டு அருகே கரசூர் சாலையில் 'கேன்சீஸ் இன்டர்நேஷ்னல் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் செல்போன் டவர் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது.இங்கு, மேற்கு வங்கம், ஒடிசா உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 4,000த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஷிப்ட் முறையில் வேலை செய்து வருகின்றனர்.



நேற்று காலை 10:00 மணி அளவில் இரும்பு ராடுகளை கொண்டு செல்லும் 'செயின் பிளாக்' இயந்திரம் அறுந்து, கீழே வேலை செய்து கொண்டிருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த உசேன்மாலீக் மகன் ஜிகர்மாலிக் 32, மீது விழுந்தது.அதில், அவர் தலை நசுங்கி இறந்தார்.

ஜிகர் மாலிக் உடலைக் கண்டு ஆவேசமடைந்த சக தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாக அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.சேதராப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார், விபத்தில் இறந்த ஜிகார்மாலிக் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முயன்றனர்.



அவர்களை தடுத்த சக தொழிலாளர்கள், எவ்வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் வேலை செய்வதால், அவ்வப்போது உயிர் பலி ஏற்படுவதாகவும், இறந்தவர் உடலை பிரேத பரிசோதனை செய்து சொந்த மாநிலத்திற்கு தொழிற்சாலை நிர்வாகம் அனுப்பி விடுகிறது. நிவாரணம் எதுவும் வழங்குவதில்லை.



அதனால், தொழிற்சாலையில் உரிமையாளர் நேரில் வந்து, இன்றைய விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்குவது குறித்து உறுதி அளித்த பிறகே உடலை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.அதனை ஏற்காத போலீசார், லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்துவிட்டு, ஜிகர்மாலிக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



இதனால், ஆவேசமடைந்த தொழிலாளர்கள் திரண்டு, தொழிற்சாலையில் நிறுத்தி வைத்திருந்த அதிகாரிகளின் கார்களையும், அலுவலகத்தையும் அடித்து நொறுக்கினர். தடுக்க முயன்ற போலீசாரை, இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்கினர். போலீஸ் ஜீப்பை அடித்து நொறுக்கி, தலைக்குப்புற கவிழ்த்துவிட்டு தப்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தினால், தொழிற்சாலை போர்க்களம் போல் காட்சி அளித்தது.



தொழிலாளர்கள் தாக்கியதில் மண்டை உடைந்து படுகாயமடைந்த போலீஸ்காரர் வெங்கடேசன், ஆறுமுகம் ஆகியோர் சேதராப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கலவரம் பற்றி தகவலறிந்த சீனியர் எஸ்.பி., லோகேஷ்வரன் மற்றும் எஸ்.பி.,க்கள் சுபம்கோஷ், ரங்கநாதன் ஆகியோர் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு, 30 தொழிலாளர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X