சேலத்தில் வரும் 26 வரை மழை நீடிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
13:35

சேலம்: சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அதிகபட்சம் சேலத்தில், 39.8 மி.மீ., மழை பதிவாகி உள்ளது. அதேபோல், இடைப்பாடி, 31, சங்ககிரி, 10, ஓமலூர், 8, காடையாம்பட்டி, 5.2, ஆணைமடுவு, 5, கரியகோவில், ஏற்காடு தலா, 3, மேட்டூர், 1.6 மி.மீ., மழை பெய்துள்ளது. தொடர்ந்து, நேற்று காலை வெயில் அடித்த நிலையில், மதியம் கருமேகம் திரண்டு வழக்கம்போல் மழை பெய்தது. சில இடங்களில் இடியுடன் மழை கொட்டியது. இதேநிலை, மாவட்டம் முழுதும் நீடித்தது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பச்சலனத்தால், வரும் 26 வரை, மழை தொடரும் என, வானிலை அதிகாரிகள் கூறினர்.


வரலாறு காணாத மழை: பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், கடந்த, 20 மாலை முதல், நள்ளிரவு வரை, இடியுடன் கனமழை பெய்தது. இதுகுறித்து, வட்டார வேளாண் உதவி இயக்குனர் திருப்பதி கூறுகையில், ''பெத்தநாயக்கன்பாளையத்தில், 213 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யக்கூடிய மழை. காற்று வீசாமல் மழை பெய்ததால் பெரிய அளவு சேதம் இல்லை. கடந்த, 5 ஆண்டில், இதுபோன்று மழையளவு பதிவாகவில்லை. 2018 முதல், 2019 வரை மழையே இல்லை. 2019 முதல், 2020 வரை, 900 மி.மீ., மழை அளவு பதிவானது. 2021 - 22ல் இந்த மழையளவு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.


நிரம்பிய வடமனேரி: டேனிஷ்பேட்டை உள்கோம்பை, சேர்வராயன் மலை அடிவார பகுதியில், மேற்கு சரபங்கா நதி உருவாகிறது. ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில், சில வாரங்களாக பெய்து வரும் மழையால் சரபங்காவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது. தொடர்ந்து, அருகில் உள்ள கோட்டைகுள்ளமுடையான், பண்ணப்பட்டி, சந்தைப்பேட்டை ஏரிகள் நிரம்பி, தற்போது கஞ்சநாயக்கன்பட்டி வடமனேரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து நேற்று காலை, 11:00 மணிக்கு கோடி விழுந்தது. இதனால், அப்பகுதியில் உள்ள விவசாய கிணறு, தண்ணீர் தேவை பூர்த்தியாகும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.


போக்குவரத்து நெரிசல்: சேலம், அம்மாபேட்டையில், ஆத்தூர் பிரதான சாலை பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளது. அந்த பள்ளம் தெரியாததால், யாரும் விழுந்து விடாமல் இருக்க, சாலை தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், சாலை குறுகி வாகனங்கள் ஊர்ந்தபடி சென்று போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், கல்லூரி, வேலைக்கு செல்வோர் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதனால், பள்ளத்தை சீரமைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.


பருவமழை பாதிப்பு தடுக்க உத்தரவு: சேலம், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கார்மேகம் முன்னிலை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு அலுவலர், பூம்புகார் கப்பல் போக்குவரத்து தலைவர் சண்முகராஜா தலைமை வகித்து பேசியதாவது: வடகிழக்கு பருவமழையின் போது, கடந்த கால பாதிப்பு பகுதிகளை முன்னதாக கண்டறிந்து, அத்தகைய இடத்தில், தேவையான முன்னேற்பாடு பணிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான நோய் தடுப்பு மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். குடிநீர் தேக்க தொட்டிகள் அனைத்தும், குளோரினேசன் செய்திட வேண்டும். தொற்று தடுக்க குப்பை அகற்றுதல், சாலையோரங்களில் தண்ணீர் தேங்காமல் தடுத்தல் உள்பட அனைத்து நடவடிக்கைகள், குறிப்பாக, தங்கு தடையின்றி போக்குவரத்தை உறுதி செய்திட நடவடிக்கை தேவை. நீர் நிலைகள் இருப்பு குறித்த விபரத்தை, உடனடியாக மாவட்டத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். மழை பாதிப்பை, கட்டணமில்லா 1077 என்ற எண்ணுக்கும், கலெக்டர் அலுவலக அறை எண், 121ல், 0427-2452202 என்கிற எண்ணுக்கும், பொதுமக்கள் தகவல் தரலாம். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து பள்ளப்பட்டி ஏரியை கலெக்டர் ஆய்வு செய்தார்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
23-அக்-202113:53:16 IST Report Abuse
SENTHIL NATHAN மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X