ஓமலூர்: வேலாக்கவுண்டனூரை சேர்ந்த, 10ம் வகுப்பு படிக்கும் மகளை காணவில்லை என, அவரது பெற்றோர், நேற்று முன்தினம், ஓமலூர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில், முத்துநாயக்கன்பட்டி, செம்மேட்டை சேர்ந்த, கூலித்தொழிலாளி சிவா, 35, சிறுமியை கடத்தியது தெரியவர, அவரை, 'போக்சோ' சட்டத்தில், நேற்று, போலீசார் கைது செய்தனர். சிறுமியை சேலம் காப்பகத்தில் சேர்த்தனர்.