நஷ்டத்தில் இருந்து தப்பிக்க 400 ஆம்னி பஸ்கள் நிறுத்தம்: உரிமையாளர்கள் முடிவால் பயணிகள் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
13:42

சேலம்: ''டீசல், டயர், உதிரிபாகங்களின் விலை உயர்வு, நிதி நிறுவனங்களின் நெருக்கடியால், ஒரே வாரத்தில், 400 ஆம்னி பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது,'' என, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.


இது குறித்து அவர் கூறியதாவது: கொரோனாவுக்கு முன் தமிழகத்தில், 6,000 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த தொழிலில், இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெற்று வந்தனர். கொரோனா ஊரடங்கால், 16 மாதங்கள் பஸ்கள் இயங்காததால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு, உரிமையாளர்களுக்கு, 1,000 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டது. செப்., முதல் பஸ்கள் இயங்கிய நிலையில், கடந்த, அக்.,14ல் கொண்டாடப்பட்ட ஆயுதபூஜையை தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை என்பதால், 1,800 ஆம்னி பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், டயர் ஜோடி, 48 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது, 8,000 ரூபாய் விலை அதிகரித்து, 56 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. டீசல் விலை, 100 ரூபாயை தொட்டு விட்ட நிலையில், உதிரிபாகங்கள் விலை, 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இவற்றின் விலை அதிகரித்துள்ள நிலையில், டீசல் லிட்டர், 72 ரூபாய்க்கு விற்ற போது வசூலித்த கட்டணம் தான் தற்போது வசூலிக்கிறோம். இதனால், ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு கடும் இழப்பு ஏற்பட்டு வருகிறது. பெங்களூருவில் இருந்து திருநெல்வேலிக்கு குளிர்சாதன படுக்கை வசதி பஸ் இயக்கப்படும் நிலையில், டீசல் செலவாக, 40 ஆயிரம் ரூபாயும், சுங்க கட்டணமாக, 5,000 ரூபாய், டிரைவர், கண்டக்டர் சம்பளமாக, 5,000 ரூபாய் என, 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், வருமானம் என்பது, 40 ஆயிரம் ரூபாய் தான் கிடைக்கிறது.


இதே போல், ஒவ்வொரு வழித்தடத்திலும் இயக்கப்படும் பஸ் ஒன்றுக்கு, 5,000 ரூபாய் முதல், 10 ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுவதால், அதில் இருந்து தப்பிக்க ஆயுதபூஜைக்கு முதல் நாள், 1,800 பஸ்கள் இயங்கிய நிலையில், தற்போது, 400, பஸ்களின் இயக்கம் நிறுத்தப்பட்டு, 1,400 பஸ்கள் தான் இயங்குகின்றன. தற்போது இயக்கத்தில் உள்ள பஸ்களுக்கு பெற்ற கடனுக்கு கொரோனா காலத்தில் தவணைத் தொகை செலுத்தாததால், பல்வேறு தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் பஸ்களை ஜப்தி செய்ய துவங்கி உள்ளனர். இதனால், தீபாவளியை முன்னிட்டு பஸ்களை இயக்க தயாரான உரிமையாளர்களும் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போதைய சூழலில் தீபாவளி பண்டிகையின் போது, 2,000 பஸ்கள் இயங்கினாலே, சாதனை என்று தான் சொல்லலாம். தீபாவளி பண்டிகைக்கு பின்னர் ஆம்னி பஸ்களின் இயக்கம், இதே நிலை தொடர்ந்தால், முற்றிலும் நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார். ஆம்னி பஸ் உரிமையாளர்கள் தொடர்ந்து பஸ்களின் இயக்கத்தை நிறுத்தி வருவது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆம்னி பஸ் பிரியர்கள் அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பஸ்களை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
23-அக்-202115:12:07 IST Report Abuse
ஆரூர் ரங் COVID க்கு முன் விடுமுறை நாட்களில் பயணிகளிடம். 😛 அடித்த கொள்ளை பணம் எங்கே?
Rate this:
Cancel
SENTHIL NATHAN - DELHI,இந்தியா
23-அக்-202113:51:07 IST Report Abuse
SENTHIL NATHAN எல்லா ஆம்னி பாசிகளையும் நிறுத்தி விடுங்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X