எதிர் கட்சி தலைவர் பழனிசாமியை குறி வைத்து இளங்கோவன் வீட்டில் 'ரெய்டு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
13:43

ஆத்தூர்: எதிர் கட்சி தலைவர் பழனிசாமியை குறி வைத்து, அவரது 'நிழல்' என கூறப்பட்ட இளங்கோவன் வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனை நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர், புத்திரகவுண்டன்பாளையத்தை சேர்ந்த, இளங்கோவன், 57. அமைச்சராக இருந்த, முன்னாள் முதல்வர் பழனிசாமியுடன் நெருக்கம் ஏற்பட்டு அவரது 'நிழல்' போல் செயல்பட துவங்கினார். 2013ல், சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்த இவருக்கு, மாநில தலைமை கூட்டுறவு வங்கி துணை தலைவர் பதவியை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதன்பின், 2014 முதல், தற்போது வரை மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார். அ.தி.மு.க., ஆட்சியில், முதல்வர், துணை முதல்வர் மட்டுமின்றி, அமைச்சர்கள் பலருடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டார். ஜெயலலிதா மறைவுக்கு பின், முதல்வராக இருந்த பழனிசாமியுடன் நெருக்கம் அதிகரித்தது. முன்னாள் அமைச்சர்கள் கரூர் விஜயபாஸ்கர், வேலுமணி, வீரமணி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் ஆகியோரது வீடுகளில் நடந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களில், அந்த அமைச்சர்களுடன் இளங்கோவன் தொடர்பு இருந்ததாக சில ஆவணங்கள், போலீசாருக்கு கிடைத்துள்ளன. அதனடிப்படையில் இளங்கோவன் வீட்டில் சோதனை நடந்தாலும், முன்னாள் முதல்வர் பழனிசாமியை குறி வைத்து தான், அவரது நிழலாக உள்ள இளங்கோவன் வீடு, தொடர்புடைய நபர்கள் வீடு, கடைகள் என, 27 இடங்களில் சோதனை நடந்துள்ளது. சோதனை முழுக்க முழுக்க பழனிசாமியை சிக்க வைப்பதற்கான ஆதாரங்களை தேடியே நடைபெறுவதாக, அ.தி.மு.க., வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக இவரைத் தான் பழனிசாமி நியமித்திருந்தார். ஆத்தூர், கெங்கவல்லி, ஏற்காடு, வீரபாண்டி தொகுதி வேட்பாளர்களை தேர்வு செய்து, வெற்றி பெறச் செய்தார். அத்தொகுதியகளில், தி.மு.க., தோல்விக்கு இவரே காரணம் என, அக்கட்சி தலைமை கடும் கோபத்தில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


'எனக்கு எந்த பயமும் இல்லை': இளங்கோவன் கூறுகையில், ''தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின், இந்த சோதனையை எதிர்பார்த்தது தான். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்துவதால் எனக்கு எந்த பயமும் இல்லை. தி.மு.க.,வின் இச்செயல் கண்டு அஞ்சபோவதில்லை. நான் கட்டிய புதிய வீடு, வங்கியில், 3.20 கோடி ரூபாய் கடன் பெற்று தான் கட்டியுள்ளேன்,'' என்றார்.


300 ஏக்கரில் அமைந்துள்ள கல்லூரி: திருச்சி மாவட்டம், முசிறியில், எம்.ஐ.டி., என்ற பாலிடெக்னிக் கல்லூரியில், கடந்த, 2011-12ல், பங்குதாரராக சேர்ந்த இளங்கோவன், அதே கல்லூரியை விலைக்கு வாங்கினார். அ.தி.மு.க., ஆட்சிக்கு பின், 150 ஏக்கரில், வேளாண் தொழில்நுட்ப கல்லூரி; 100 ஏக்கரில், வேளாண் டிப்ளமோ மற்றும் 60 ஏக்கரில், மருத்துவம் சார்ந்த கல்வி நிறுவனங்கள் என, 300 ஏக்கருக்கு மேல் கல்லூரி அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கல்லூரியின் சேர்மனாக இளங்கோவன், துணை சேர்மனாக அவரது மகன் பிரவீன்குமார் உள்ளார். கல்லூரி நிலம் வாங்கியதற்கு எங்கிருந்து வருவாய் வந்தது குறித்தும், வேறு ஏதாவது சொத்துகள் உள்ளதா என, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X