பெல் ஒப்பந்த தொழிலாளர் சாவு: நீதிகேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம் | ராணிப்பேட்டை செய்திகள் | Dinamalar
பெல் ஒப்பந்த தொழிலாளர் சாவு: நீதிகேட்டு உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
14:39

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே பெல் ஒப்பந்தத் தொழிலாளர் உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நிறுவனம் முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.


ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை (42). இவருக்கு திருமணமாகி காசிஅம்மாள் (40) என்ற மனைவியும் தர்ஷினி(10) பெண் குழந்தையும் உள்ளனர். இவர் ராணிப்பேட்டை பகுதியில் செயல்பட்டுவரும் பொதுத் துறை நிறுவனமான பாரத மிகுமின் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார்.



இந்நிலையில் நேற்று மாலை கிரேன் இயந்திரத்தில் இருந்து இரும்பு பிளேட்டுக்களை கீழே இறக்கும் போது எதிர்பாராதவிதமாக இரும்பு பிளேட்டுகள் சரிந்து விழுந்ததில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் வேலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஏழுமலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



ஏழுமலை உயிரிழப்புக்கு பெல் நிறுவனத்தின் பாதுகாப்பின்மை, அஜாக்கிரதை எனக் கூறியும், அவரது சாவுக்கு நியாயம் கேட்டும் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் தொழிற்சாலை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.



சம்பவம் குறித்து தகவலறிந்த சிப்காட் போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X