வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட வியாபாரி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
15:40

ஓசூர்: கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பூ வியாபாரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம், 869 கன அடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை நீர்வரத்து, 908 கன அடியாக அதிகரித்தது. தென்பெண்ணை ஆற்றில், 820 கன அடியும், வலது, இடது கால்வாயில், 88 கன அடியும் என மொத்தம், 908 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணை மொத்த உயரமான, 44.28 அடியில், 41.33 அடிக்கு நீர் இருப்பு இருந்தது. தென்பெண்ணை ஆற்றில், 820 கன அடி நீர் திறக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆங்காங்கு ரசாயன நுரையும் ஆற்றில் தேங்கி நின்றது. இந்நிலையில், சூளகிரியில் பூ வியாபாரம் செய்து வரும் மருதாண்டப்பள்ளியை சேர்ந்த பெருமாள், 35, கோபசந்திரம் தட்சின திருப்பதி கோவில் அருகே, மாலையில் வைத்து கட்டும் இலைகளை பறிப்பதற்காக, தென்பெண்ணை ஆற்றில் இறங்கினார். அப்போது, வெள்ளத்தில் சிக்கி அடித்து செல்லப்பட்டார். சூளகிரி போலீசார், ஓசூர் தீயணைப்பு துறையினர் இணைந்து, பெருமாளை தேடும் பணியில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை மீட்க முடியவில்லை.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X