மனைவியை கொலை செய்த கணவர்; சிறைக்கு வெளியே இருந்து எஸ்கேப் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
மனைவியை கொலை செய்த கணவர்; சிறைக்கு வெளியே இருந்து எஸ்கேப்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
15:40

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த ரங்கசந்திரத்தை சேர்ந்தவர் விஜி என்ற கார்த்திக், 37. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி ரூபா, 33. மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கார்த்திக், அடிக்கடி தகராறு செய்து வந்ததால், குஞ்சிகிரிபாளையத்தில் உள்ள தன் தாய் வீட்டிற்கு ரூபா சென்று விட்டார். அங்கு சென்ற கார்த்திக், குடும்பம் நடத்த வர மறுத்து மனைவி ரூபாயை, கழுத்து அழுத்து நேற்று முன்தினம் கொலை செய்தார். போலீசில் சரணடைந்த அவரை, தளி போலீசார் கைது செய்தனர். தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி, நவ.,2 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, தர்மபுரி மாவட்ட சிறைக்கு, எஸ்.எஸ்.ஐ., இளையமூர்த்தி, தலைமை காவலர் அசோகன், முதல்நிலை காவலர் ராஜசேகர் ஆகியோர், நேற்றிரவு காரில் அழைத்து சென்றனர். சிறைக்கு வெளியே இரவு, 7:00 மணிக்கு காரை நிறுத்தி விட்டு, காவலர் ராஜசேகர் முதலில் கீழே இறங்கினார். அப்போது, கை விலங்குடன் காரில் இருந்து இறங்கிய கார்த்திக், காவலர் ராஜசேகரை தள்ளி விட்டு, அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார். அவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார் தேடி வருகின்றனர். கார்த்திக்கை தப்ப விட்ட போலீசாரிடம், துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X