தமிழகத்தில் தலைவர்கள் சிலைகளின் எண்ணிக்கை 6,500!: 1,336 சிலைகளுடன் அம்பேத்கருக்கு முதலிடம்; கோர்ட் உத்தரவால் கணக்கெடுப்பு பணி தீவிரம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
15:50

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, மாவட்ட அளவில் பொது இடம், நெடுஞ்சாலை, அரசு நிலம், தனியார் இடங்களிலும் உள்ள சிலைகளை கணக்கெடுத்து உறுதி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில் தமிழகத்தில், 6,500 சிலைகள் வரை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக அம்பேத்கருக்கு, 1,336 சிலைகள் உள்ளது தெரியவந்துள்ளது.


வேலூர் மாவட்டம், அரக்கோணம் தாலுகா கோனுர் கண்டிகையில் மேய்கால் புறம்போக்கில் சிலை வைப்பது தொடர்பான வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகிறது. இவ்வழக்கில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடந்த, 6 ல் அரசுக்கு பிறப்பித்த உத்தரவில், 'தமிழகத்தில் பொது இடங்கள், நெடுஞ்சாலை, அரசு நிலம், பொது சாலை, மேய்கால் புறம்போக்குகளில் உள்ள சிலைகளை மூன்று மாதங்களில் கணக்கெடுத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். பூங்கா உள்ளிட்ட இடங்களில் அவற்றை வைக்க வைக்க வேண்டும். சிலைகள், அதற்கான கட்டமைப்பு போன்றவை குறித்த பொது விதிமுறைகளை அரசு வகுக்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவுப்படி, மாவட்டங்களில் உள்ள சிலைகள் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. நேற்று வரை நடந்த கணக்கெடுப்பில், தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் சிலை கணக்கெடுப்பு பணி முழுமையடையவில்லை. தமிழகத்தில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள் எத்தனை என்பது குறித்து போலீசாரும், வருவாய்துறையினரும் வாய் திறக்கவில்லை.


இதுபற்றி, வருவாய் துறையினர், போலீசார் கூறியதாவது: மாவட்ட அளவில் உள்ள தேசிய, மாநில தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள், சமூக தலைவர்கள் போன்றோருக்கு சாலை, பொது இடம், பூங்கா, அரசு அலுவலக வளாகம், தனியார் இடங்கள் என அனைத்தையும் பட்டியலிட்டு, அதற்கான ஆவணங்களையும் சேகரித்துள்ளோம். பொது மற்றும் தனியார் இடங்களில் உள்ள அனைத்து சிலைகளும், முறையான அனுமதி பெற்றவை. நீதிமன்ற உத்தரவில் கூறியபடி சாலை, மக்கள் கூடும் இடங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்னை நிலவும் இடங்களில் வரும் சிலைகளை தனியாக பட்டியலிட்டுள்ளோம். ஒவ்வொரு சிலையும் வைக்கப்பட்டது முதல், தற்போது வரை, ஏதாவது பிரச்னைகளை சந்தித்துள்ளதா என்ற விபரத்தையும் பட்டியலிட்டுள்ளோம். சிலையை சுற்றி இரும்பு கம்பிகள் கொண்டு கூண்டு அமைத்து பாதுகாக்கப்படும் சிலைகளை தனியாக பட்டியலிட்டுள்ளோம். சில மாவட்டங்களில் சில ஜாதிய, அரசியல் ரீதியிலான தலைவர்களின் சிலைகளால் பிரச்னை இருக்கலாம். சில வழக்குகள் கூட நிலுவையில் உள்ளன. அவற்றை தனியாக பட்டியலிடுகிறோம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட தலைவர்கள், சுதந்திர போராட்ட தலைவர்கள் போன்றோருக்கு சிலைகள் அமைக்கும் கோரிக்கை, இடம் தேர்வு, அதற்கான எதிர்ப்பும், ஆதரவு போன்ற கருத்துக்களையும் பதிவு செய்து, அரசுக்கு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு கூறினர்.


போலீசார், வருவாய்த்துறையினரின் கணக்கெடுப்பின் படி, 2021 அக்., 21ம் தேதி நிலவரப்படி, தமிழகம் முழுவதும், 6,308 சிலைகள் உள்ளன. தூத்துக்குடி, தென்காசி மாவட்ட சிலை கணக்கெடுப்பு முடியாத நிலையில், அந்த மாவட்ட சிலைகளையும் கணக்கில் சேர்த்தால், 6,500 சிலைகளுக்கு மேல் வரும். இதில் அதிகபட்சாக அம்பேத்கருக்கு, 1,336 சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக அதிகபட்சமாக, 550 சிலைகள் சென்னை மாவட்டத்தில் உள்ளன. அதற்கு அடுத்த இரு இடங்களில், 403 சிலைகளுடன் சேலம் மாவட்டமும், 380 சிலைகளுடன் கடலூர் மாவட்டமும் உள்ளன. 41 சிலைகளுடன் திருப்பூர் மாவட்டம் கடைசியில் உள்ளது. கோர்ட் உத்தரவுப்படி, அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலைகள் அகற்றப்பட வேண்டும். பொது இடங்களில் அனுமதி பெற்று வைக்கப்பட்டுள்ள சிலைகளை, பூங்கா அமைத்து அங்கு கொண்டு சென்று வைக்க வேண்டும். தமிழக அரசு இதற்காக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது.


சிலை வைக்க விதிகள் என்ன: பஞ்., முதல் மாநகராட்சி வரை உள்ள பகுதியில், எந்த இடத்தில் சிலை வைத்தாலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதை இணைத்து, அந்த உள்ளாட்சியில் அனுமதி பெற்று, கலெக்டரிடம் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் அம்மாவட்ட போலீஸிலும் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெற வேண்டும். இச்சிலைக்காக ஒரு கமிட்டி அமைத்து, அவர்கள் சிலைக்கான பொறுப்பை ஏற்க வேண்டும். சிலை வைப்பது தொடர்பாக கலெக்டர் மூலம், வருவாய் நிர்வாக ஆணையருக்கு விண்ணப்பம் சென்று, உள் துறைக்கு சென்று, தலைமை செயலர் அனுமதி வழங்குவார். சிலை அமைப்பதற்கான உத்தரவை கலெக்டர் வழங்குவார். அதேநேரம், குறிப்பிட்ட சிலை அமைப்பதால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை வரும், அத்தலைவர் சமுதாயத்துக்கு, நாட்டின் இறையாண்மைக்கு எதிரானவர், தடை செய்யப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர் அல்லது ஆதரித்தவர், சமூக நல்லிணக்கத்துக்கு எதிரானது என தெரியவந்தால், அச்சிலைக்கான அனுமதியை தலைமை செயலரும், டி.ஜி.பி., அலுவலகம் வழங்கும் அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கும். தனியார் பட்டா நிலத்தில், தன் இயக்க தலைவர், பொது தலைவர்களின் சிலைகளை வைக்க விரும்பினால் அதற்கான அனுமதியை கலெக்டரே வழங்குவார். அச்சிலைக்கான நபர் குறித்த முழு விபரமும் பரிசீலிக்கப்பட்டு, தகுதியானவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்படும்.


- நமது நிருபர் குழு -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X