கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2021
15:53

ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, கணவனை கொலை செய்து நாடக மாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த உனிசெட்டியை சேர்ந்தவர் ஐயப்பன், 37, சரக்கு வாகன டிரைவர்; இவர் மனைவி ரூபா, 25. இவர்களுக்கு இரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன், வாலிபர் ஒருவருடன் ரூபா ஓட்டம் பிடித்தார். இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஐயப்பன், சில நாட்களுக்கு முன் திரும்பி வந்த மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குடிபோதையில் தகராறு செய்த ஐயப்பன், வீட்டில் இருந்து மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் தடுத்ததால், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து அவரை காப்பாற்றினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அவரது வீட்டில் ஐயப்பன் சடலமாக கிடந்தார். அவரது கையில் கத்தி இருந்ததால், தற்கொலை செய்து கொண்டதாக தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகத்தின் பேரில் அவரது மனைவி ரூபாவிடம் நடத்திய விசாரணையில், ஜவளகிரி அடுத்த மஞ்சுகிரியை சேர்ந்த கள்ளக்காதலன் தங்கமணி, 20, என்பவர் உதவியுடன், கணவனை கழுத்தறுத்து கொலை செய்தது தெரிந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


இது குறித்து போலீசார் கூறியதாவது: கணவர் அடிக்கடி தகராறு செய்து வந்ததால், அவரை கொலை செய்ய ரூபா திட்டமிட்டார். அதனால் கள்ளக்காதலன் உதவியை நாடினார். நேற்று முன்தினம் ஏற்கனவே இருமுறை ஐயப்பன் தற்கொலை செய்ய முயன்றதால், அவரை கழுத்தறுத்து கொலை செய்து விட்டு, தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாட முடிவு செய்தார். நேற்று முன்தினம் இரவு கள்ளக்காதலன் உதவியுடன், குடிபோதையில் இருந்த கணவனின் கை, கால்களை துப்பட்டாவால் கட்டி போட்டு, கழுத்தறுத்து ரூபா கொலை செய்தார். பின்னர் கணவர் கையில் கத்தியை வைத்து விட்டு, கணவர் திட்டியதாக கூறி, அருகில் இருந்த தன் மாமியார் வீட்டிற்கு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து, மாமியாரை அழைத்துக்கொண்டு, ஒன்றும் தெரியாதது போல் தன் வீட்டிற்கு சென்றார். அங்கு ஏற்கனவே ஐயப்பன் இறந்து கிடந்ததால், ரூபா மீது சந்தேகமடையாத உறவினர்கள், அவர் தற்கொலை செய்து கொண்டதாக நினைத்தனர். விசாரணையில் கொலை நடந்தது தெரியவந்தது. இவ்வாறு, போலீசார் கூறினர்.


 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X