கூட்டுக்கொள்ளை: தந்தை, தாய், மகன் உட்பட 4பேர் கைது | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
கூட்டுக்கொள்ளை: தந்தை, தாய், மகன் உட்பட 4பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
16:03

மேட்டுப்பாளையம்: காரமடை கண்ணார்பாளையத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட தந்தை, தாய், மகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை கண்ணார்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் தனலட்சுமி, 52. தந்தை கிட்டானுடன் வசித்து வருகிறார். இவர் வீட்டை விட்டு வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார்.



அப்போது, வீட்டின் பூட்டும், பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைக்கப்பட்டிருந்த ஐந்தரை சவரன் நகைகள், 37 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.



காரமடை போலீசார், இந்த கொள்ளை சம்பந்தமாக, பெரியநாயக்கன்பாளையம் காளிபாளையத்தை சேர்ந்த தந்தை செந்தில், 51, தாய் கண்ணம்மாள், 47, மகன் மணிகண்டன், 23, மற்றும் காரமடையைச் சேர்ந்த தனலட்சுமி, 35 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, நகைகளையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


ஒரு குடும்பத்தினரே கூட்டுக் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் காரமடையில் பரபரப்பை ஏற்படுத்தியது.





 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X