பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
16:10

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் சந்தைபேட்டையில் அரசுப் பள்ளி அருகே குப்பைகொட்டுவதை தடைசெய்யகோரி, பி.டி.ஓ.,விடம் மக்கள் மனு அளித்தனர். கொன்னையார் கிராமம், எலச்சிபாளையம் சந்தைபேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே அப்பகுதியை சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக குப்பை கொட்டுகின்றனர். இதனால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது. அருகில் வசிப்பவர்கள் பல்வேறு தொற்றுநோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், குப்பையை அகற்றி, மீண்டும் அவ்விடத்தில் குப்பை கொட்டாத வகையில் நடவடிக்கை எடுக்ககோரியும், அதேஇடத்தில் பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டு பல மாதங்களாக பணிகள் பாதியில் நிற்பதை சரிசெய்யக்கோரியும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன் தலைமையில், அப்பகுதி மக்கள் பி.டி.ஓ., அருளப்பனிடம் மனு அளித்தனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X