மனைவி கை உடைப்பு; கணவன் தலைமறைவு | நாமக்கல் செய்திகள் | Dinamalar
மனைவி கை உடைப்பு; கணவன் தலைமறைவு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
16:12

குமாரபாளையம்: குமாரபாளையம் அருகே மனைவியின் கையை உடைத்த கணவர் தலைமறைவானார். குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் குணசுந்தரி, 41. இவரது கணவர் சீரங்கன், 45. கூலித்தொழிலாளி. இவர் தினமும் குடித்து விட்டு வருவதும், வீட்டு செலவுக்கு பணம் தராமல் இருந்ததாலும் கணவன், மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை குடிபோதையில் வந்த கணவனிடம், குணசுந்தரி வீட்டு செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த சீரங்கன் மனைவியை அடித்ததில் அவருக்கு வலது கை எலும்பு முறிவு ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து மிரட்டலும் விடுத்துள்ளார். குணசுந்தரி ஈரோடு ஜி.ஹெச்.,ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் சென்ற போது சீரங்கன் தலைமறைவானது தெரியவந்தது.

 

Advertisement
மேலும் நாமக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X