சிறுவாணியில் தொடரும் மழை 30 செ.மீ.,க்கு மதகு திறப்பு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
சிறுவாணியில் தொடரும் மழை 30 செ.மீ.,க்கு மதகு திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
20:37

கோவை: சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 50 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. நீர்மட்டம், 41.12 அடியாக இருக்கிறது.

மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதிக்குள் சிறுவாணி அணை அமைந்திருக்கிறது. வளிமண்டல காற்றழுத்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, நல்ல மழைப்பொழிவு காணப்படுகிறது. அணையில் நீர்க்கசிவு இருப்பதால், பாதுகாப்புக்காக மதகு திறக்கப்படுகிறது. மழை குறைந்தால், மதகு உயரம் குறைக்கப்படுகிறது.

நேற்று முன்தினம், 87 மி.மீ., நேற்று - 50 மி.மீ., மழை பதிவானது. நீர் மட்டம், 41.55 அடியாக இருக்கிறது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட அருவிகளில் நீர்வரத்து காணப்படுவதால், 10 செ.மீ., உயரத்துக்கு திறக்கப்பட்டிருந்த மதகு, 30 செ.மீ., ஆக அதிகரிக்கப்பட்டது.

வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், ''தீபாவளி வரை கனமழை மற்றும் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கொங்கு பகுதியில் தினமும் மதியம் முதல் இரவு வரை மிக கன மழை பெய்யலாம். 28 முதல் மாநிலம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரவலாக கன மழை காணப்படும். இதற்கேற்ப விவசாயிகள், பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மேற்கொள்ளவும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X