அரசு ஒதுக்கிய நிதி  வழங்க எதிர்பார்க்கிறது 'கொசிமா' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
அரசு ஒதுக்கிய நிதி  வழங்க எதிர்பார்க்கிறது 'கொசிமா'
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 அக்
2021
20:45

கோவை: 'சிட்கோ' தொழிற்பேட்டையை மேம்படுத்த, அரசு ஒதுக்கிய நிதியை உடனே வழங்க, 'கொசிமா' கோரிக்கை விடுத்துள்ளது.


கோவை சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர் நலச்சங்கத்தின் (கொசிமா), 48வது பொதுக்குழு கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் நல்லதம்பி தலைமையில் நடந்த

இக்கூட்டத்தில், 'மூலப்பொருட்கள் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த, முக்கிய தொழில் அமைப்பு பிரதிநிதிகள் அடங்கிய விலை கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும். திறன் மேம்பாட்டு பயிற்சி வாயிலாக திறன்மிகு தொழிலாளர்களை உருவாக்க வேண்டும்.'சிட்கோ' தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, அரசு ஒதுக்கிய நிதியை உடனே வழங்க வேண்டும். சிட்கோவில், 500 கிலோ வாட் மின்மாற்றியாக நிறுவித்தர வேண்டும். குறுந்தொழில்கள் துவங்க அடுக்குமாடி தொழிற்பேட்டை அமைத்துத்தர வேண்டும்.

தமிழக தொழில் முதலீட்டு கழகத்தால் வழங்கப்படும் கடன்களுக்கு பின்னுாட்ட வட்டி மானியம், 6 சதவீதம் என்பதை, காலவரையின்றி நீட்டிக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X