உடைமைகளை இழக்காதீர்கள் உஷாரா இருங்க, மக்களே! விழிப்புணர்வு ஊட்டும் போலீஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 அக்
2021
06:43
பதிவு செய்த நாள்
அக் 23,2021 20:59

திருப்பூர்: திருட்டு உட்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் குறித்த பட்டியலை போலீசார் திரட்டி, அவர்களை கண்காணிக்கும் பணியில் திருப்பூர் மாநகர போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


''தீபாவளி நேரத்தில் பொதுமக்கள் உஷாராக இருந்து, உடைமைகளைப் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்'' என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.


தொழில் நகரமான திருப்பூரில் குற்றங்கள் தொடராமல் தடுக்க மாநகர போலீஸ் தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது, தீபாவளி நெருங்குவதால், பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் பொருட்டு பழைய குற்றவாளிகளின் பட்டியலை மாநகர போலீசார் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


இதுதொடர்பாக, போலீஸ் கமிஷனர் வனிதா தலைமையில் நடந்த கூட்டத்தில் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர்களுக்கு முன்னேற்பாடுகள், ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்படி, வடக்கு மற்றும் தெற்கு சரகத்துக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற நடவடிக்கையாக, பழைய குற்றவாளிகள், தலைமறைவாக உள்ளவர்கள், ஜாமீனில் வெளியே வந்தவர்கள் என, தனித்தனியாக பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.



அதில், டூவீலர் திருட்டு, வழிப்பறி, நகை பறிப்பு, பூட்டை உடைத்து திருட்டு, ஜேப்படி உட்பட வழக்குகளில் தொடர்புடையவர்கள் என, அனைவரின் விபரத்தையும் சேகரித்து வருகின்றனர்.

ஜாமீனில் அல்லது தண்டனை காலம் முடிந்து வெளியே உள்ளவர்களை போலீசார் கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.வங்கிகள், ஜவுளி மற்றும் நகை கடைகள், பொது இடங்களில் போலீஸ் பாதுகாப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.



வாகன ரோந்து போலீசாரும், ஒரே இடத்தில் அதிக நேரம் இருந்து விடாமல் தொடர்ந்து வாகனங்களில் சென்றபடி கண்காணிக்க வேண்டும்.பொது இடங்களில் வந்து செல்லும் மக்களின் நகை, பணம் மற்றும் உடைமைகளை பாதுகாக்க எச்சரிக்கை விழிப்புணர்வு வாசகங்களுடன் பேனர்கள், போஸ்டர்கள் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.


தனிப்படைகள் அமைப்புதீபாவளி முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, போலீஸ் துணை கமிஷனர் ரவி கூறியதாவது:அனைத்து விதமான வழக்குகள் தொடர்பான பழைய குற்றவாளிகள், தலைமறைவானவர்கள் என, அனைவரும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தீபாவளி நெருங்கு வதால் பண்டிகை கால குற்றங்களை தடுக்கும் முயற்சியாகவும் இப்பட்டியல் சேகரிக்கப்படுகிறது.


விழிப்புணர்வு எச்சரிக்கை பேனர்கள், மக்கள் கூடும் இடத்தில் வைக்க உள்ளோம். 'பிங்க் பீட்'டில் ஈடுபடுத்தப்பட்ட பெண் போலீசார், தற்போது, குற்றங்களை தடுக்கும் பணியில் ஈடுபட உள்ளனர். அவர்கள், பஸ்கள், மக்கள் கூட்டம் உள்ள இடங்களில் கண்காணிப்பில் உள்ளனர்.வடக்கு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையில், நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.


பொதுமக்கள் தங்களது உடைமைகளை கவனமாக வைத்திருந்து, விழிப்போடு இருக்க வேண்டும். தீபாவளி நெருங்கிவிட்டதால் வெளியூர் செல்லும் மக்கள் தங்கள் எல்லைக்கு உட்பட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தகவல் அளித்து சென்றால், கண்காணிக்க ஏதுவாக இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பிரச்னைகள்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X